Back

ⓘ தமிழ்நாடு அரசியல்                                               

புரட்சி பாரதம் கட்சி

தமிழக அளவில் செயல்படும் புரட்சி பாரதம் எனும் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி என்றறியப்படும் ஜெகன்மூர்த்தி ஆவார். இக்கட்சி பட்டியல் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டது. இக்கட்சிக் கொடியின் நடுவில் அசோகச் சக்கரம் உள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக கீழ்வைத்தியானன்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் புதிய பாரதம் கட்சியின் வேட்பாளராக ஜெகன்மூர்த்தி போட்டுயிடுகிறார்.

                                               

எம். ஆர். காந்தி

மாவிளை இராமசாமி நாடார் காந்தி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வென்று தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக 2016 முதல் 2020 முடிய பதவி வகித்தவர். இவர் இந்துத்துவா இயக்கத்திற்காக திருமணம் செய்து கொள்ளாதவர்.

                                               

பி. மூர்த்தி

பி. மூர்த்தி என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் ஆவார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முனேற்றக் கழகம் சார்பில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். இவர் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சோழவந்தான் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சசராக பதவியேற்றார்.

                                               

சி. வி. கார்த்திகேயன்

சி. வி. கார்த்திகேயன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பணியமர்வு நீதிபதி ஆவார். அவர் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் ஆளுநர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர். நீதிபதி சி. வி. கார்த்திகேயன் 16.11.2016 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

                                               

செ. கிருஷ்ணமுரளி

செ. கிருஷ்ணமுரளி என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கிருஷ்ணமுரளி தென்காசி மாவட்டம் செங்கோட்டையினைச் சார்ந்தவர். சங்கரன்கோயில் அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இக்கட்சியின் சார்பில் மே 2021இல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                               

இரெ. இளம்வழுதி

இவர் தனது பள்ளிப்படிப்பை கடலூ செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஒரு பள்ளி என்றாலும், அது ஒரு கல்லூரி என்று அழைக்கப்பட்டது, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைத் பட்டத்தினையும் மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பட்டத்தினையும் பெற்றார். இவர் விசாலாட்சியை மணந்தார். விசாலாட்சி ஒரு விபத்தில் மரணமடைந்ததையடுத்து அன்னபூரணியை என்பவரை மணந்தார். இளம்வழுதி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். தமிழ்ப் பற்றின் காரணமாக தன் குழந்தைகளுக்கு மேகலா, புகழேந்தி, உதயராணி, கலையரசி, மாலதி மற்றும் பன்னீர் செல்வம் எனத் தூயத் தமிழ் பெயரிட் ...

                                               

என். கயல்விழி செல்வராஜ்

என். கயல்விழி செல்வராஜ் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த தமிழக அமைச்சரும் ஆவார். கயல்விழி எம்.காம்., பி.எட்., படித்துள்ளார். இவரது கணவர் கே. செல்வராஜ் ஒரு வழக்கறிஞராவார். இந்த இணையருக்கு எஸ். திலீபன், வழக்கறிஞருக்கு படித்த எஸ். கே. உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் அமைச்சசராக பதவ ...

                                               

மரியதாஸ் ருத்தினசாமி

மரியதாஸ் ருத்தினசாமி என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்த ஒரு முன்னணி கல்வியாளர், இராஜதந்திரி, எழுத்தாளர் ஆவார். அப்போதைய மதராஸ் மாகாணத்தின் செகந்திராபாத், ஐதராபாத், கடலூரில் கல்வி பயின்ற இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜில் கல்வி கற்கச் சென்றார், இறுதியில் லண்டனின் கிரேஸ் இன்னில் பாரிஸ்டராக தகுதி பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையில் ருத்னசாமி மதராஸ் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை இறந்த பின்னர் 1925 செப்டம்பரில் சட்டமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 1926 தேர்தல் வரை இவர் ...

                                               

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் அல்லது பொருளாதரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்பது இந்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் இந்திய அரசின் வேலைவாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு அற்ற பொதுப் பிரிவினராக முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களை மட்டுமே குறிக்கும். இந்திய அரசு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க 2019-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103-வது திருத்தம் மேற்கொண்டது.பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. ம ...

                                               

இந்திய அஞ்சல் தலைகளில் நபர்களின் பட்டியல்

இது இந்தியாவின் தபால்தலைகளில் உள்ள தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், சமூக சீர்த்தவாதிகள் உள்ளிட்டேரின் பட்டியல்.

                                               

பி. எச். மனோஜ் பாண்டியன்

பி. எச். மனோஜ் பாண்டியன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆலங்குளம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2001 சட்டமன்றத் தேர்தலில் செரன்மதேவி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் 2010 முதல் 2016 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

                                               

சென்னை மாநகர் அண்ணல்

சென்னை மாநகர் அண்ணல் என்பது சென்னையின் முக்கிய குடிமகனுக்கு ஒரு வருடம் வழங்கப்படும் அதிகாரத்தின் அரசியல் சார்பற்ற பதவியாகும். இந்த பதவி 1998இல் ரத்து செய்யப்பட்டது. சென்னை மாநகரின் அண்ணல் நிலை 1726ஆம் ஆண்டு சென்னை சாசனத்தில் உருவாக்கப்பட்டது. இது 1727 ஆகஸ்ட் 17 அன்று நடைமுறைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்திற்கு மக்களை வரவழைத்தல், தீர்ப்பாயரகச் செயல்படல், சொத்துக்களை இணைத்தல் மற்றும் முத்திரையிடல் மற்றும் தேவைப்பட்டால், ஏலத்திற்கு ஏற்பாடு செய்தல் அண்ணலின் கடமைகளாக இருந்தது. இப்பதவிக் காலாம் ஒரு வருடமாகும். ஷெரிப் அலுவலகம் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருந்தார் மற்றும் முன்னுரிமையின் வரிசையில் மேயரு ...

                                               

ஆர். சண்முகசுந்தரம் (வழக்கறிஞர்)

இராஜகோபால் சண்முகசுந்தரம் என்பவர் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ளவராவார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1953 இல் பிறந்தவரான சண்முக சுந்தரம் 1977இல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1989 -1991 இல் திமுக ஆட்சியில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி அரசு வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு 2002-2008 காலகட்டத்தில் இருந்தார். 1995 ஆம் ஆண்டு மே 30 ஆம் ...

                                               

டி. ஜி. வெங்கட்ராமன்

திண்டிவனம் ஜி. வெங்கட்ராமன் 1931 பிப்ரவரி 2 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் பிறந்தார். இவரது தந்தை வி. கோபால கவுண்டர். இவர் வன்னிய கௌண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருமதி. வி. வசந்தவை 0760 மே 8 அன்று மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உண்டு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், மதராஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டமும் பெற்றார். இவர் மறைந்த திரு. நாராயணசாமி முதலியார் தமிழ்நாட்டின் முன்னாள் சட்ட அமைச்சர் இடம் சென்னையில் இளவல் வழக்கறிஞராக பணியாற்றினார், பின்னர் திண்டிவனம் மற்றும் தென்னாற்காடு முழுவதும் வழக்கறிஞராக ...

                                               

மோனா ஹென்ஸ்மேன்

மோனா ஹென்ஸ்மேன், என்பவர் ஒரு இந்திய கல்வியாளர், பெண்ணியவாதி, அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்தியப் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாடிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் கொறடா இவர் ஆவார். இவர் 1953 முதல் 1960 வரை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வராக இருந்தார்.

தமிழ்நாடு அரசியல்
                                     

ⓘ தமிழ்நாடு அரசியல்

1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆகும். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் மறுமலர்ச்சிக் கழகம், புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, சிறுபான்மை மக்கள் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா,காயிதே மில்லத் போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

                                     

1. 1900–1947

தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு டாக்டர் சி. நடேசனால், டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

                                     

2. 1947–1962

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராசர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் பொற் கால ஆட்சி முக்கியக் கூறாக விளங்கியது. இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கினார்.

சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

                                     

3. 1962–1967

1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றையப் பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றன.

                                     

4. 1967–1971

அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழிக் கொள்கையும், சுயமரியாதைக் கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கியப் பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர் எம். ஜி. ஆர் உதவியால் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்தார். கருணாநிதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தனி கட்சியைத் தொடங்கினார்.

                                     

5. 1977–1990

தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

                                     

6. 1991–2006

1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் 2004ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. 2006ம் ஆண்டு தமிழக அரசியலில் முதன் முறையாகப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக, காங்கிரஸ் கட்சியின் உதவியால் கூட்டணி ஆட்சி அமைத்தது.

                                     

7. 2016-

விரிவாக பார்க்க தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அஇஅதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 89 இடங்களில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். இம்முறை காங்கிரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தன.

                                     

8. குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டில் 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31 சனவரி, 1976 முதல் 30 சூன், 1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 17 பெப்ரவரி, 1980 முதல் 6 சூன், 1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பின்னரும், 30 சனவரி, 1988 முதல் 27 சனவரி, 1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோதும், இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு 30 சனவரி 1991, முதல் 24 சூன், 1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

                                     

9. வெளி இணைப்புக்கள்

  • தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது?
  • காணாமல் போன அரசியல் கட்சிகள்
  • தமிழக அரசியல் ஒரு பார்வை ஆங்கில மொழியில்
  • தமிழக அரசியல் வட்டார செய்திகள் வலைத்தமிழ்
  • A Time of Coalitions: Divided We Stand ஆங்கில மொழியில்
                                               

டி. இரத்தினவேல்

டி. இரத்தினவேல் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். இவர் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர்.

                                               

டி. வி. கமலசாமி

டி. விஸ்வநாத பிள்ளை கமலசாமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் 1952 ஏப்ரல் 3 முதல் 1954 ஏப்ரல் 2 வரையிலும், 1954 ஏப்ரல் 3 முதல் 1960 ஏப்ரல் 2 வரையிலும் மதராஸ் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

                                               

ஐ. பரந்தாமன்

ஐ. பரந்தாமன் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் எழும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ப. அப்துல் சமது

ப. அப்துல் சமது ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த இவர், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மணப்பாறை தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

சிந்தனை செல்வன்

சிந்தனை செல்வன் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ஜெ. கருணாநிதி

ஜெ. கருணாநிதி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தியாகராய நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ. பி. செந்தில்குமார்
                                               

ஐ. பி. செந்தில்குமார்

ஐ. பி. செந்தில்குமார் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பழநி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

சி. கே. சரஸ்வதி (அரசியல்வாதி)

சி. கே. சரஸ்வதி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ஏ. வெற்றியழகன்

ஏ. வெற்றியழகன் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

பிரபாகர் ராஜா

பிரபாகர் ராஜா ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →