Back

ⓘ அரசியல் கட்சி                                               

கியெர்மோ லாசோ

கியெர்மோ லாசோ எக்குவடோர் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் எக்குவடோர் அரசுத்தலைவரா 2021 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2021 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அந்திரேசு அரூசு என்பவரைத் தோற்கடித்து, எக்குவதோரின் 47-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் 2013, 2017 தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தார். 2013 தேர்தலில், ராஃபாயெல் கொறேயாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வந்தார். லாசோ 199ப9 இல் சமீல் மகுவாதின் அமைச்சரவையில் பொருளாதாரத்துக்கான அமச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். முன்னதாக 1998 முதல் 1999 வரை கயாசு மாகாண ஆளுநராகப் பதவியில் இருந்தார். அரசியல் பணியைத் தவிர்த்து ...

                                               

இத்ரிசு தேபி

இத்ரிசு தேபி இத்னோ சாட் நாட்டின் அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும் ஆவார். இவர் 1990 முதல் இறக்கும் வரை சாட் நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். இவர் படை ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் செல்லும் போது கொல்லப்பட்டார். இத்ரிசு ஆளும் தேசப்பற்றுள்ள இரட்சணிய இயக்கத்தின் தலைவரும் ஆவார். இவர் சகாவா இனக்குழுவின் பிதாயத் வம்சத்தைச் சேர்ந்தவர். 1990 திசம்பரில் அன்றைய அரசுத்தலைவராக இருந்த இசேனே ஆப்ரே இற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். அதற்குப் பின்னர் இவரது ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற பல கிளர்ச்சிகளையும், இராணுவப் புரட்சிகளையும் முறியடித்து ஆட்சியில் தொடர்ந்தார். 1996, ...

                                               

முகேஷ் (நடிகர்)

முகேஷ் முகேஷ் மாதவன் என்ற பெயரில் பிறந்த இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் இவரது பணிக்காக பெரிதும் அறியப்பட்டவர். நகைச்சுவை வேடங்களில் இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராக இருந்தார். கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதியை 2016 மற்றும் 2021இல் இந்திய பொதுவுடைமைக் கட்சி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மன்ற உறுப்பினரானார்.

                                               

ஜேம்ஸ் சங்மா

ஜேம்ஸ் பாங்சாங் கொங்கல் சங்மா என்பார் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேகாலயா அரசாங்கத்தில் தற்போதைய உள்துறை, மாவட்ட குழு விவகாரங்கள், உணவு சிவில் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், மின்சார அமைச்சராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி உறுப்பினரான இவர், தனது சகோதரர் கான்ராட் சங்மாவுடன் முதன்முதலில் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ள தாதெங்ரே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்மா மேகாலயாவின் முன்னாள் முதல்வரும், இந்திய மக்களவை சபாநாயகருமான பி. ஏ. சங்மாவின் மகனாவார ...

                                               

ஜக்கையா

கொங்கரா ஜக்கைய்யா ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், இலக்கிய ஆர்வலரும், பத்திரிகையாளரும், பாடலாசிரியரும், பின்னணிக் கலைஞரும், அரசியல்வாதியுமாவார். மேலும் இவர், முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையிலும் தெலுங்கு நாடகங்களிலும் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த முறை நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் தனது வெண்கலக் குரலுக்காக கஞ்சு காந்தம் ஜக்கையா என்று அழைக்கப்பட்டார். நாற்பது ஆண்டுகள் நீடித்த ஒரு திரைப்பட வாழ்க்கையில், இவர் எண்பது படங்களில், ஒரு முன்னணி நடிகராக, பல்வேறு வகை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தனது ஆரம்ப வாழ்க்கையின் போது, தொங்க ராமுடு 1955 ...

                                               

வீணா ஜார்ஜ்

வீணா ஜார்ஜ் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், கேரள அரசாங்கத்தின் தற்போதைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேரள சட்டமன்றத்திற்கு அரண்முல்லா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் ஈடுபுடுவதற்கு முன்பு, இவர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய மலையாள செய்தித் தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். மலையாள செய்தித் தொலைக்காட்சிகளில் இருந்த முதல் பெண் நிர்வாக ஆசிரியர் இவர் ஆவார்.

                                               

ரங்கநாத் ராமச்சந்திர திவாகர்

ரங்கநாத் ராமச்சந்திர திவாகர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் வாழ்ந்த காலம் 1894 செப்டம்பர் 30 முதல் 1990 சனவரி 15 வரையுள்ள காலமாகும். ஆர். ஆர். திவாகர் என்று சுருக்கமான பெயரால் இவர் அழைக்கப்படுகிறார்.

                                               

ஆரிப் முகமது கான்

ஆரிப் முகமது கான் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரள ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். குறிப்பாக எரிசக்தி மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

                                               

கிருஷ்ண பால் சிங் யாதவ்

கிருஷ்ண பால் சிங் யாதவ் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்திய பிரதேசத்தில் குணா நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவைத் தோற்கடித்தார். முங்காவோலி சட்டசபை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக யாதவ் சிந்தியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரசிலிருந்து விலகினார்.

                                               

ஆர். சிவா

ஆர். சிவா, என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தற்போது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 2, 2021ல் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இத்தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. எனவே புதுச்சேரி மாநில எதிர்கட்சித் தலைவராக ஆர். சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச்செயளாலர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2001, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் உருளையன்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்ற உ ...

                                               

ஆர். இராமகிருஷ்ணன்

இராமகிருஷ்ணன் வணிகவியலில் பட்டதாரியும், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவருமாவார். பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இராமகிருஷ்ணன் 1965 ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும செய்தித்தாள்களில் பணிக்கு சேர்ந்தார். அங்கு இவர் அதன் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 1974-75ல் சென்னையின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்ட இவர் பின்னர் 1980 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டார். இவர் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளும்ற குழு, சீட்டு நிதிகளின் கூட்டுத் தேர்வுக் குழு போன்ற நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். இரண்டு முறை இந்திய பத்திரிகை ...

                                               

குலாம் முகமது சாதிக்

குலாம் முகமது சாதிக் ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.1964 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை சம்மு-காசுமீர் மாநிலத்தின் பிரதமராக பணியாற்றினார். பின்னர் இந்த பதவி முதலமைச்சராக மறுபெயரிடப்பட்டது. தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு இறக்கும் வரை குலாம் முகமது சாதிக் முதல்வராகப் பதவியைத் தொடர்ந்தார்.

                                               

பேட்மா சாகின்

பேட்மா சாகின் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு இராசயணப் பொறியாளர் மற்றும் அரசியல்வாதியாவார். 2011 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று சாகின் எர்டோகனின் மூன்றாவது அமைச்சரவையில் குடும்ப மற்றும் சமூக கொள்கைகள் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 அன்று துருக்கி நாட்டின் காசியான்டெப் நகரில் முசுதபா, பெரிகான் சாகின் தம்பதியருக்கு மகளாக சாகின் பிறந்தார். இசுதான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலில் பாடத்தைப் படித்தார். நெசவுத் துறையில் பொறியாளராகவும் மேலாளராகவும் பேட்மா சாகின் பணியாற்றினார். தனது கணவர் இசெட் சாகினுடன் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். இர ...

அரசியல் கட்சி
                                     

ⓘ அரசியல் கட்சி

அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு.

                                     

1. வரைவிலக்கணம்

அரசறிவியலில், அரசியல் கட்சிகளுக்கான பல வரைவிலக்கணங்கள் உள்ளன. வரலாற்று அடிப்படையில் முதலாவது வரைவிலக்கணம், அவற்றின் அமைப்புமுறை, செயல்பாடு, கூட்டமைவு என்பவற்றில் கவனம் செலுத்தியது. 1770 ஆம் ஆண்டில் எட்மண்ட் புர்க்கே Edmund Burke என்பார் எழுதிய இன்றைய முரண்பாடுகளுக்கான காரணங்கள் தொடர்பிலான எண்ணங்கள் Thoughts on the Cause of the Present Discontent என்னும் அவரது நூலில் அரசியல் கட்சி என்பது, தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில், தேசிய நலனுக்காக ஒன்றாக உழைக்கும் நோக்கில், ஒன்றுபட்டவர்களின் குழு. என்று குறிப்பிட்டுள்ளார். 1816 ஆம் ஆண்டில், பெஞ்சமின் கான்ஸ்டண்ட் என்பவர் அரசியல் கட்சி தொடர்பான கருத்தியல் வரைவிலக்கணத்தை உருவாக்கினார். ஆனால் இது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தி வருகிறதேயன்றி, கொள்கைகள் அற்ற அதிகாரத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சந்தர்ப்பவாத அல்லது நடைமுறைசார்ந்த கட்சிகளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை. இவருடைய கருத்துப்படி கட்சி என்பது, ஒரே அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களின் கூட்டமைப்பு ஆகும். மார்க்சியவாதிகள், அரசியலை ஒரு வர்க்கப் போராட்டமாகக் கொள்ளும் தமது அடிப்படைக் கொள்கைக்கு ஏற்ப, அரசியல் கட்சி என்பது, சமுதாய வர்க்கத்தினரில் கூடிய வர்க்க உணர்வு கொண்டவர்களின் அமைப்பு என்றனர். மக்ஸ் வெப்பர் Max Weber கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த புரூக்கின் கருத்தை ஏற்றுக்கொண்டு வரைவிலக்கணத்தை மேலும் விரிவுபடுத்தினார். இவர் கூற்றுப்படி, கட்சி என்பது சுதந்திரமாகச் சேர்ந்து கொள்ளுதலின் அடிப்படையில், ஒன்று சேர்தலும் இணைந்து செயற்படுதலும் ஆகும். அமைப்புமுறையிலான ஒரு குழுவுக்குள் அடங்கும் அதன் தலைவர்களுக்கு அதிகாரத்தைப் பெறுவதை இதன் இலக்காகவும், கட்சிக்குள் தீவிரமாக இயங்குபவர்களுக்கு பொருள்சார் நலன்களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகவும் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அரசறிவியலாளரும் பிற ஆய்வாளர்களும், கட்சிகளின் நுட்பியல் மற்றும் தேர்தல் சார்ந்த இயல்புகளில் கூடிய கவனம் செலுத்தினர். அந்தனி டோன்ஸ் Anthony Downs என்பார், ஒரு அரசியல் கட்சியென்பது, முறையான தேர்தல் முறையொன்றில் பதவிகளைப் பெறுவதன் மூலம் அரச எந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும் மனிதர்கள் குழு என்று கூறினார்.

                                     

2. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்

மக்களாட்சி வழியிலான அரசியலில், அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு கடமைகள் உள்ளன. இவை மக்களாட்சி முறையை நிலைத்திருக்கச் செய்யவும், அதைச் சிறப்பாக செயற்படவும் பெரிதும் உறுதுணை புரிகின்றன.

கடமைகள்

 • பொதுவான கொள்கைகளைத் தோற்றுவித்தல்.
 • தேர்தலில் பங்கேற்பு மற்றும் போட்டியிடல்.
 • மக்களுக்குக் கல்வியறிவைப் புகட்டும் நடவடிக்கையில் ஈடுபடுதல்.
 • மக்களை ஒன்று திரட்டுதல் அல்லது இணைக்கும் அமைப்பாக செயல்படுவது போன்ற கடமைகளை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.
 • அரசுக்கும் மக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படுத்துதல்.
 • அரசாங்கத்தை நடத்துதல் மற்றும் விமர்சனம் செய்தல்.
                                     

3. அரசியல் கட்சி முறையின் வகைகள்

மக்களாட்சி முறையின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படும். அவையாவன:

 • ஒரு கட்சி முறை
 • பல கட்சி முறை
 • இரு கட்சி முறை

பல கட்சி முறை

இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஆட்சிமுறைக்குப் பல கட்சி முறை எனப்படும். பல கட்சி முறையானது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

                                     

3.1. அரசியல் கட்சி முறையின் வகைகள் ஒரு கட்சி முறை

ஒரு கட்சி முறையின் கீழ் ஒரே ஒரு கட்சி மட்டும் அரசியல் முறையில் இருக்கும். இக் கட்சி முறை மக்களாலும் அரசியலமைப்புச் சட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாகக் காணப்படும். எத்தகைய எதிர்ப்பும் மாற்றுக் கருத்தும் இன்றி அரசு அதிகாரத்தைப் பெற்று இயங்கும். ஒரு கட்சி ஆட்சி முறையில் மற்ற கட்சிகள் செயல்படாமல் இருக்கும். சீனா மற்றும் கியூபா போன்ற நாடுகளில் இந்த ஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கிறது.

                                     

3.2. அரசியல் கட்சி முறையின் வகைகள் ஒரு கட்சி முறையின் நிறைகள்

 • ஒரு கட்சி ஆட்சி முறையில் முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் வாய்ப்புகள் மிகுதி.
 • ஒரு கட்சி முறை அவசர, ஆபத்தான, இயற்கைப் பேரிடர் காலங்களில் திறமையாகவும் சுதந்திரமாகவும் விரைந்து செயல்பட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நிவாரணங்களையும் அளித்திட முடியும்.
 • நாட்டின் பெருமைகள் பெருமளவு உயர்வு அடைந்து காணப்படும்.
 • செலவு குறைவு. சிக்கனமானது.
                                     

3.3. அரசியல் கட்சி முறையின் வகைகள் இரு கட்சி முறை

இரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும். இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது. ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

பிரிட்டனில் தொழிலாளர்கள் கட்சி மற்றும் பழமைவாத கட்சி Conservative Party என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.

                                     

3.4. அரசியல் கட்சி முறையின் வகைகள் இரு கட்சி முறையின் சிறப்புகள்

 • இரு கட்சி முறையில் இரண்டு கட்சிகள் மட்டும் இருப்பதால் மக்கள் குழப்பமின்றி ஆளும் கட்சியை முறையாகத் தேர்ந்தெடுப்பது என்பத எளிதாக உள்ளது.
 • எதிர் கட்சி எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு ஆளும் கட்சியினை வழிநடத்துகிறது.
                                     

3.5. அரசியல் கட்சி முறையின் வகைகள் இரு கட்சி முறையின் குறைபாடுகள்

 • இவ்விரண்டு கட்சிகளும் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட தவறான உடன்படிக்கைகளினால் மக்கள் முட்டாளாக்கப்படும் அவல நிலைக்கு ஆட்படுவர். அதன்மூலம் இரு கட்சிகளின் மீதான தவறுகள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றை மூடிமறைக்க வழிகள் மிகுதியாக உள்ளன.
 • இரு கட்சி முறையில் காணப்படும் இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளும் மோசமாக இருக்குமேயானால், மூன்றாவது கட்சியைத் தேர்வு செய்வதற்கு வாய்ப்பில்லை.
                                     

3.6. அரசியல் கட்சி முறையின் வகைகள் பல கட்சி முறை

இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஆட்சிமுறைக்குப் பல கட்சி முறை எனப்படும். பல கட்சி முறையானது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

                                     

3.7. அரசியல் கட்சி முறையின் வகைகள் பல கட்சி முறையின் நிறைகள்

 • பல கட்சி முறையில் பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கத்தை நிர்மாணிக்க முனையும். அதற்காக, பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்திடும் தேர்தல் பரப்புரை அறிக்கைகளை மக்கள் மத்தியில் முன்வைக்கும்.
 • பல கட்சி முறையில் புதிய கருத்துகளையும் புதிய நோக்கில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்கொண்ட புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
                                     

3.8. அரசியல் கட்சி முறையின் வகைகள் பல கட்சி முறையின் குறைகள்

 • பெரும்பான்மை பலமிழந்து காணப்படும் ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பிற கட்சி உறுப்பினர்களைக் கவர்ந்து அரசியல் அநாகரிகம் மேலோங்கும்.
 • பல கட்சி முறையில் ஊழல் மிகுந்து காணப்படும்.
 • ஒரு சார்புடைமை சிந்தனைகள் மிகும்.
 • பல கட்சி முறையில் ஆளும் கட்சி மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தம் ஆட்சியாளர்களின் நன்மைகளைப் பெரிதென கருத வாய்ப்புண்டு.
 • கட்சித் தாவல் நடவடிக்கைகளால் பல கட்சி முறையில் அரசாங்கம் நிலைத்தன்மை அற்றதாக உருமாறி பல்வேறு ஊறுகள் உண்டாகும்.
 • மாநில, மாகாண உணர்வுகள் செல்வாக்குப் பெறும்.
                                     

3.9. அரசியல் கட்சி முறையின் வகைகள் எதிர்கட்சிகளின் கடமைகள்

எதிர்கட்சிகளின் செயற்பாட்டை ஒட்டியே மக்களாட்சியின் வெற்றி உள்ளது. மக்களாட்சியில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைப்பதென்பது அரிது. இச்சமயங்களில் குறைவான இடங்களைப் பிடித்த அரசியல் கட்சிகள் மக்களாட்சி நடைமுறையில் எதிர்கட்சியாக அமையும். மத்திய அரசின் மக்களவை, மாநில அளவில் சட்டசபை ஆகியவற்றில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக இடங்களைப் பெறும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எதிர் கட்சி என்றழைக்கப்படுகிறது. ஓர் ஆளும் கட்சி அமைச்சருக்கு நிகரான மற்றும் சமமான அதிகாரங்களை எதிர்கட்சித் தலைவர் பெறத் தகுதியுடையவராவார்.

அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சிகள் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற்று முக்கியமானதாகத் திகழும். அது போலவே எதிர்கட்சிகளின் பங்கும் கடமையும் குடியாட்சியில் இன்றியமையாததாக இருக்கும். ஆளும் கட்சி அல்லது கட்சிகள் எதேச்சதிகார மனப்பான்மையோடு நடந்து கொள்ளாமல் இருக்கவும், அவர்களின் அதிகாரங்களை வரைமுறைப்படுத்திடவும், தொடர்ந்து கண்காணித்திடவும் எதிர் கட்சிகளின் பங்கு இன்றியமையாதது. இதுதவிர, ஆளும் கட்சியின் கொள்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனம் செய்வதென்பது எதிர்கட்சிகளின் தலையாயப் பணியாகும். மேலும், ஆளும் கட்சியின் கொள்கைகள், தவறுகள், அநீதிப் போக்குகள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் முதலானவற்றை நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளுக்கு அப்பால் ஊடகங்கள் வழியாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இவர்களின் இன்றியமையாதப் பணிகளாகும்.

எதிர்கட்சிகளுக்கு அரசாங்க செலவினங்களை அறிந்து கொள்ள முழு அதிகாரமும் உரிமையும் உள்ளது. இரு அவைகளின் கூட்டத் தொடர்களின்போது, கேள்வி நேரங்களில், ஆளும் கட்சியினரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்து விமர்சனம் செய்வதன் மூலம், அவ் ஆளும் கட்சியினரின் தவறான அதிகார மேலாதிக்கத்திற்கு எதிர்கட்சியினர் தடை போட்டு மக்களாட்சியை நிலைப்படுத்துகின்றனர்.                                     

4. அரசியல் கட்சியின் அடிப்படைகள்

ஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்டுக்கோப்பையும் தனித்துவத்தையும் பெற்றிருத்தல் இன்றியமையாதது ஆகும். அதுபோல், பின்வரும் அடிப்படைகள் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான ஒன்றாகும். அவையாவன:

 • ஓர் அரசியல் கட்சிக்கு, ஒரு தலைமை என்பது அவசியம். கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தலைவரையே சாரும்.
 • அரசியல் கட்சியின் கட்டமைப்பு பின் வருவனவற்றை உள்ளடக்கியது.
 • உறுப்பினர்கள்
 • அடிப்படைச் செயல் திட்டம்
 • விதிமுறைகள் மற்றும் ஒழுங்குக் கட்டுப்பாடுகள்
 • கட்சிக்கான வேலைத் திட்டங்கள் அல்லது செயல்முறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருத்தல்.
 • அத்திட்டங்களில் நீண்ட கால மற்றும் குறுகிய காலத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருத்தல் அவசியம். திட்டங்களைச் செவ்வனே நடைமுறைப்படுத்திட சில உத்திகள் மற்றும் அணுகுமுறைகள் தேவை.
 • கட்சிக்கென கொள்கையும், கோட்பாடுகளும் வரையறை செய்திருத்தல்.

அரசியல் கட்சி எனப்படுவது, சில குறிக்கோள்களுடன் அமையப்பெற்ற வாக்காளர்களின் ஓர் ஒப்பற்ற நிறுவன அமைப்பாகும். இதன் வேறு சில அடிப்படைகள் என்பன,

 • சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் தத்தம் கட்சி உறுப்பினர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துதல் அரசியல் கட்சியின் முக்கியப் பணியாகும்.
 • அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவுகள், உரைகள், வெளியீடுகள் மூலமாகவும் கட்சி மற்றும் அதன் கொள்கைகள் பரப்புரை செய்யப்படுதல் அவசியம்.
 • ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு நிறுவன அமைப்பைத் தோற்றுவிப்பதும் வளர்ப்பதும் இன்றியமையாதவையாகும்.
                                               

வெனீசூலா கம்யூனிஸ்ட் கட்சி

வெனீசூலா கம்யூனிஸ்ட் கட்சி வெனீசூலா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1931-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் Pedro Ortega இருந்தார். இந்தக் கட்சி Tribuna Popular என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventud Comunista de Venezuela ஆகும். 2005 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 133 686 வாக்குகளைப் 8 இடங்கள் பெற்றது.

                                               

ஏ. விஜயகுமார்

ஏ. விஜயகுமார் என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். 2016 சூன் இல், இவர் மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 சூன் 3 அன்று இவர் தனது கட்சியில் பிற மூன்று வேட்பாளர்களுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே. பி. சங்கர்
                                               

கே. பி. சங்கர்

கே. பி. சங்கர் என்பவர் தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் முன்னதாக சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 5 ஆவது வார்டின் உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

                                               

நல்லமுத்து இராமமூர்த்தி

டி. நல்லமுத்து இராமமூர்த்தி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். இவர் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு மதராஸ் மாநிலத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கபட்டார். இவர் 1946 ஆம் ஆண்டு மிஸ் மியர்ஸுக்குப் அடுது சென்னை இராணி மேரி கல்லூரியின் துணைவேந்தராக பொறுப்பேற்றவர். மேலும் இவர்தான் அதன் முதல் இந்திய துணைவேந்தரும் ஆவார்.

                                               

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சாகும். இது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் அதே பெயரில் உள்ள துறையைச் சேர்ந்த மோடி அரசால் 2019 மே மாதம் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அமுலின் சந்தைப்படுத்துபவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வரவேற்றது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →