Back

ⓘ ஐக்கிய நாடுகள் அவை                                               

எட்டு நாடுகளின் கூட்டணி

எட்டு நாடுகளின் கூட்டணி என்பது பலதரப்பட்ட நாடுகளின் ராணுவ கூட்டணியாகும். இது 1900 ஆண்டு சீன பாக்சர் கலகக்காரர்களின் தாக்குதலிலிருந்து துணைத் தூதரகங்கள் மற்றும் கிறித்தவ மிஷனரிகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தப் படையில் சுமார் 45 ஆயிரம் துருப்புக்கள் இருந்தன. ஜெர்மனி, ஜப்பான், உருசியா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஆகிய எட்டு நாடுகளிலிருந்து இந்த துருப்புகள் கொண்டுவரப்பட்டன. பீகிங்கில் இருந்த சர்வதேச துணைத் தூதரகங்கள் கிங் அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட பாக்சர் கலகக்காரர்களால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது எட்டு நாடுகளின் கூட்டணியானது தங் ...

                                               

காக்கத்தியர் கலா தோரணம்

காக்கத்திய கலா தோரணம் என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று வளைவு ஆகும். வாரங்கல் கோட்டையில் நான்கு அலங்கார வாயில்கள் உள்ளன. அவை முதலில் அழிக்கப்பட்ட பெரிய சிவன் கோயிலின் வாயில்களை உருவாக்கியது. அவை காக்கத்திய கலா தோரணம் அல்லது வாரங்கல் வாயில் என்று அழைக்கப்படுகின்றன. வாரங்கல் கோட்டையின் இந்த வரலாற்று வளைவுகளின் கட்டடக்கலை அம்சம் காக்கத்திய வம்சத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தெலங்காணா அரசு சின்னமாக அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. வாரங்கல் கோட்டையில் உள்ள இந்த வாயில்கள் அல்லது வளைவுகள் சாஞ்சி தூபியின் நுழைவாயில்களுடன் ஒற்றுமைகள் இருப்பதாகக் ...

                                               

உலக வாழை மன்றம்

உலக வாழை மன்றம் என்பது வாழைத் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த திறந்த உரையாடலை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய வாழை விநியோகச் சங்கிலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கேற்பாளர்களுக்கான ஒரு நிரந்தர இடமாகும். உலக வாழை மன்ற செயலகம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் வழங்கப்படுகிறது. வாழையுடன் தொடர்புடைய சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நுகர்வோர் சங்கங்கள், அரசாங்கங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளை உலக வாழை மன்றம் ஒன்றிணைக்கிறது.

                                               

ஐதராபாத்து பல்லுயிர் பூங்கா

பல்லுயிர் பூங்கா என்பது அயல் சூழலில் தாவரங்களைப் பாதுகாக்கும் தாவரவியல் பூங்கா ஆகும். இது தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது 2012இல் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் போது நிறுவப்பட்டது. இது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நினைவுச் சின்னத்துடன் திறந்து வைத்தார். இது சனவரி 19, 2015 முதல் காச்சிபௌலியில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. தெலங்காணா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் தளவமைப்புக்குள் ரூ. 2 கோடி செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்கா இராய்துர்க் மெற்றோ நிலையத்திலிருந்து 1.6 கி.மீ. தூரத்திலுள்ளது.

                                               

பிரதிபலிக்கும் குளம்

பிரதிபலிக்கும் குளம் மேலும் பிரதிபலிப்பு குளம் என அழைக்கப்பட்டும் இது, தோட்டங்கள், பூங்காக்கள், நினைவுத் தளங்களிலுள்ள நீர்நிலைகளில் காணப்படும் தோற்றமாகும். இம்மாதியான இடங்களில் குளங்கள் வழக்கமாக ஆழமற்றதாக இருக்கும். மேலும், ஒரு நீரூற்றின் பிரதிபலிப்பு நீரின் மேற்பரப்பில் நன்கு தெரியுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

                                               

உலக நோய்த்தடுப்பு வாரம்

உலக நோய்த்தடுப்பு வாரம் என்பது உலகெங்கிலும் உள்ள நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி-தடுக்கக்கூடிய நன்மைகளை எடுத்துக்கூறி நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வாரமாகும். நோய்த்தடுப்பு விகிதங்களை அதிகரிப்பதற்கான உலகளாவிய ஒரு பொதுச் சுகாதார பிரச்சாரம் இதுவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறுகிறது. தொண்டை அடைப்பான், தட்டம்மை, தொடர் இருமல், இளம்பிள்ளை வாதம், நரப்பிசிவுநோய் மற்றும் கோவிட் -19 பெருந்தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகக் குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை வழங்கப்படும் நோய்த்தடுப்பு மருந்துகள் 25 வெவ்வேறு தொற்று அல்லது நோய்களிலிருந்து பாதுகாப்பினை தர ...

                                               

தோசா மைதானம்

தோசா மைதானம் ஒரு சுற்றுலாத் தலமாகவும், இந்தியாவின் ஒன்றியப் பகுதியான ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு மலை வாழிடமாகவும் உள்ளது. இது ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியில் அமைந்துள்ளது. பூஞ்ச் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வரலாற்று சிறப்புமிக்க தோசா மைதானம் செல்லும் பாதையையும் இந்த பெயர் குறிக்கிறது. உண்மையில், தோசா மைதானத்தின் அசல் பெயர் "தோசா மார்க்" என்று தெரிகிறது. கசினியின் மகுமூதுவும் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கும் இந்த பாதை வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது படையெடுக்க முயன்றனர்.

ஐக்கிய நாடுகள் அவை
                                     

ⓘ ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா சமாதான விரும்பி நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. ஜுலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

                                     

1. வரலாறு

தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.

1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.

                                     

2. important passage = நோக்கங்கள் =

 • கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;
 • மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
 • மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
 • இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.
 • பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
 • உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
 • உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
                                     

3. ஐக்கிய நாடுகள் முறைமை

ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:

 • ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
 • அனைத்துலக நீதிமன்றம்
 • ஐக்கிய நாடுகள் செயலகம்
 • ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
 • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
 • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ Palau சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.

அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.                                     

3.1. ஐக்கிய நாடுகள் முறைமை பொதுச் சபை

பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபெற்றனர்.

பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும்.

                                     

3.2. ஐக்கிய நாடுகள் முறைமை பாதுகாப்புச் சபை

நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன.

பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் வீட்டோ நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது.

                                     

3.3. ஐக்கிய நாடுகள் முறைமை செயலகம்

ஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது.

ஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது.

பொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.                                     

3.4. ஐக்கிய நாடுகள் முறைமை பொதுச் செயலாளர்

ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கு அண்டோனியோ கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதய செயலாளரான பாங் கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் இவர் 2021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.

"உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்" என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம் உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.

பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →