Back

ⓘ உலகம்



                                               

உலகம்

உலகம் எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது. மெய்யியல் உரைகளில் உலகம்: உள்ளிய உலகம். இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக வரலாறு என முதல் நாகரி ...

                                               

தாவதிம்ச உலகம்

தாவதிம்ச உலகம் என்பது பௌத்த அண்டவியலில் தேவர்கள் வசிக்கும் ஒரு முக்கியமான உலகமாகும். தாவதிம்ச என்றால் வடமொழியில் முப்பத்தி மூன்று என்று பொருள். எனவே தாவதிம்ச உலகம் என்பது "முப்பத்துமுக்கோடி" என்று அழைக்கப்படும் 33 தேவர்கள் வாழும் உலகம் என்று பொருள் கொள்ளலாம். தாவதிம்ச உலகம் என்பது காமதாதுவின் ஐந்தாவது உலகம் ஆகும். நம் உலகத்தோடு நேரடி தொடர்புடைய உச்ச நிலையில் உள்ள உலகம் தாவதிம்ச உலகமே என்று கூற்ப்படுகின்றது. தாவதிம்ச உலகம் மேரு மலையின் உச்சியில் 80.000 யோஜனைகள் உயரத்தில் இது ஏறத்தாழ 40.000 அடி என ஊகிக்கப்படுகிறது. இந்த உலகத்தின் மொத்த பரப்பளவு 80.000 சதுர யோஜனைகள். வசுபந்துவின் படி, இவ்வுலக ...

                                               

புதிய உலகம்

புதிய உலகம் மேற்கு அரைக்கோளத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்; குறிப்பாக கரீபியன், பெர்முடா போன்ற அண்மையத் தீவுகள் உள்ளிட்ட அமெரிக்காக்களை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. சில நேரங்களில் ஓசியானியாவும் இதில் உள்ளடங்கும். 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கண்டுபிடிப்புக் காலத்தில், பிற்காலத்தில் அமெரிக்காக்கள் எனப்படுகின்ற நிலத்தில் ஐரோப்பியர்கள் கால் பதித்தபோது இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. கிரேக்க-ரோமானிய நிலவியலாளர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் மட்டுமே உலகம் என கருதியிருந்தனர்; இவை கூட்டாக பழைய உலகம் அல்லது ஆப்பிரிக்க-யூரேசியா எனப்பட்டது. செவ்வியல் புவியியலை விர ...

                                               

வால்ட் டிஸ்னி உலகம்

வால்ட் டிஸ்னி உலகம் அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30.080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

                                               

உலகம் பிறந்தது எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக 1990ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏவிஎம் புரொடக்சன்சு தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்திருந்தார்.

                                               

வேதாள உலகம்

வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

தேவ உலகம்

இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகம் என்பது பதினான்கு உலகங்களில் ஒன்றாகும். இது தேவர்கள் வாழ்கின்ற உலகம் என்பதால் தேவ உலகம் என்று அழைக்கப்பெறுகிறது. இந்திரன் ஆள்வதால் இந்திர லோகம் அல்லது இந்திர புரி என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் தேவ லோகம், சொர்க்க லோகம், சொர்க்க புரி என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு. பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்யும் மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

                                               

பழைய உலகம்

"பழைய உலகம் என்ற சொற்றொடர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய உலகப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உலகத்தின் எஞ்சிய பகுதிகளான அமெரிக்காக்கள், ஓசியானியா ஆகிய பகுதிகள் புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது. பழைய உலகம் பெரும்பாலும் கிழக்கு அரைக்கோளப் பகுதிகளைக் குறிக்கும். ஆனாலும், மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், போர்த்துகல், மேற்கு ஆப்பிரிக்கா ஆகியன பழைய உலக நாடுகளாகவே அடையாளம் காணப்படுகின்றன. அதே வேளையில், ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஓசியானிய கிழக்கு அரைக்கோளப் பகுதிகள் புதிய உலகமாக அடையாளம் காணப்படுகின்றன.

                                               

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.

                                               

அதிசய உலகம்

அதிசய உலகம் 2012 ஆம் ஆண்டு சக்தி ஸ்காட் இயக்கத்தில், ஆர். பானுசித்ரா தயாரிப்பில், லிவிங்ஸ்டன் மற்றும் ஸ்ரீ லட்சுமி நடிப்பில் வெளியான அறிவியல் புனைவு தமிழ் திரைப்படம். டைனோசர்களை அசைப்படம் முறையில் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தி தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் தமிழ் திரைப்படம்.

                                               

எரிக்சன் உலகம்

எரிக்சன் உலகம் எனவும் அறியப்பட்டது) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும். எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. பெரிய வெள்ளைப் பந்து போன்ற வடிவமுடைய இது 110 மீட்டர் விட்டமும், 85 அடி உள்ளக உயரமும் உடையது. இக்கட்டிடத்தின் கனவளவு 605.000 கன சதுர மீட்டர்கள் ஆகும். இசை நிகழ்ச்சியின்போது 16.000 பார்வையாளர்களும், வளைகோற் பந்தாட்டத்தின்போது 13.850 பார்வையாளர்களும் இங்கு அமர முடியும். இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்த ...

                                               

சின்னஞ்சிறு உலகம்

சின்னஞ்சிறு உலகம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →