Back

ⓘ கலைகள்                                               

கலைகள்

கற்றற்கு உரியவை எல்லாம் கலைகள். இது தமிழில் கலை என்பதற்கு தரப்படம் ஒரு பொது வரையறை. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொற்றாடலிலும் இப்பொருளே வழங்குவதே காணலாம். எனினும் "உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவிய முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்" என்று தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

                                               

தற்காப்புக் கலைகள்

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில தற்கா ...

                                               

தமிழர் கலைகள்

சிலம்பம் தேவராட்டம் கோலாட்டம் தெருக்கூத்து மாடு ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் பறை ஆட்டம் உருமி ஆட்டம் உறியடி ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் குறவன் குறத்தி ஆட்டம் சேவையாட்டம் காவடியாட்டம் சிலம்பாட்டம் கும்மி பேயாட்டம் காளியாட்டம் ஆட்டங்கள் புலி ஆட்டம் சாமியாட்டம் ஒயிலாட்டம் தப்பாட்டம் வில்லுப்பாட்டு மயிலாட்டம் கைச்சிலம்பாட்டம் கரகாட்டம் பட்டிமன்றம் பாம்பாட்டம் அபிநயக் கூத்து நாட்டுக்கூத்து சாக்கம் கூத்துக்கள் சாந்திக் கூத்து மெய்க் கூத்து குரவைக் கூத்து நோக்கு பார்வைக் கூத்து சாமியாட்டம் அல்லது வெறியாட்டு கலிநடனம் என்னும் கழாய்க் கூத்து விநோதக் கூத்து பாய்ந்தாடும் கரணம் கரகம் என்னும் குடக் ...

                                               

கலை

கலை எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் அரங்கேற்றல் கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும். மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப்படங்களையோ, கா ...

                                               

ஆய கலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர்

                                               

தமிழர் தற்காப்புக் கலைகள்

நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம்.

                                               

தமிழகக் கலைகள் (நூல்)

தமிழகக் கலைகள் என்பது, தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த பல்வேறு கலைகள் பற்றி எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆகும். இந்நூலை வரலாற்றாளரும், தமிழறிஞருமான மா. இராசமாணிக்கனார் எழுதியுள்ளார். இந்நூலின் முதற் பதிப்பு 1959 ஆம் ஆண்டு சாந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பை 2009 ஆம் ஆண்டில் புலவர் பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

                                               

தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் என்ற பெயரை, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் செப்டம்பர், 2019 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இசைப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட, 11 டிசம்பர் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

                                               

நகர்ப்புறக் கலைகள்

தற்காலத்தில் இடம்பெற்றுவரும் துரித நகரமயமாக்கலும், நகர்ச்சூழலும் பல புதிய கலைகளை தோற்றுவித்தும், பழைய கலைகளுக்கு புது வடிவங்கள் கொடுத்தும், பிற பல கலைகளை மீளுருவாக்கமும் செய்தும் வருகின்றது. இப்படி நகரத்தவர்களால் நகர்ச்சூழலில் முக்கியத்துவம் பெறும் கலைகளை நகர்ப்புறக் கலைகள் எனலாம். இவற்றை கிராமத்து சூழலோ அமைந்த கலைகளோடு ஒப்பிட்டு ஆயலாம். நகரத்தில் இருக்கும் மனிதன் அன்னியப்பட்டு இருக்கின்றான் என்ற கருத்துக்கோட்பாட்டுக்கு இந்த கலைகள் ஒரு மறுப்பாக அமைகின்றன.

                                               

கைவினைக் கலைகள்

தொழில் சார்ந்த கலைகள் கைவினைக் கலைகள் ஆகும். பெரும்பாலும் இவை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பது ஆகும்.

                                               

வியட்நாமிய மற்போர்க் கலைகள்

மரபு வியட்நாமிய மற்போர்க் கலைகள் என்பவை ஃஏன் மரபுவழி சார்ந்த சீன-வியட்நாமியக் கலைகளையும் மரபாக வியட்நாமிலேயே தோன்றிய கலைகளையும் உள்ளடக்கும்.

                                               

கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம்

கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் இலங்கையின் கொழும்பு நகரில் அமையப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் 2005 சூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கட்புலன் மற்றும் அளிக்கும் ஆற்றுக்கலை துறைக்கான பல்கலைக்கழகம் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே இயங்கிவருகின்றது.

                                               

இசைச் சொற்பொழிவு

சங்கீத கதாப்பிரசங்கம் என்ற வடமொழிச் சொற்றொடரால் பரவலாக அறியப்படும் இசைச் சொற்பொழிவு, பெரும்பாலும் இந்து சமயக் கதைகளையும் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கான ஒர் ஊடகமாகப் பயன்பட்டு வருகிறது. இது, சமயம் சார்ந்த புராணங்களையும், கருத்துக்களையும் இடையிடையே பாடப்படும் இசைப் பாடல்களின் துணையோடு மக்களுக்குச் சுவைபட எடுத்துக்கூறும் ஒரு கலையாகும். இவ் இசைச் சொற்பொழிவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் விரவி வரவேண்டும். இயல், இசையோடு ஏற்ற இறக்கம், உச்சரிப்புக்கள், தனியுரை, இசையிட்ட உரை, நாடகத்திற்கு புலப்படுவது போல் நல்ல முகபாவனைகள் கொண்டு முற்று முழுதாக இவ்வம்சங்களைக் கொண்டு அமைவதே இசை சொற்பொ ...

                                               

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் என்பவர் குரல் இசை, மின்னணு இசை மற்றும் இசை கருவி போன்றவற்றை பயன்படுத்தி திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, நிகழ்பட ஆட்டம், மேடை நாடகம் மற்றும் இசை தேவைப்படும் பிற பகுதிகளுக்கு இசைத் துண்டு எழுதுபவர் ஒரு இசையமைப்பாளர் ஆவார். ஒரு இசையமைப்பாளர் எந்தவொரு இசை வகையிலும் இசையை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மேல்நாட்டுச் செந்நெறி இசை, இசை நாடகம், புளூஸ், நாட்டார் பாடல், ஜாஸ் போன்ற இசை வகைகளில் உருவாக்குவார்கள். இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இசைக் குறியீட்டைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இசை மதிப்பெண்ணில் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் சிறுவயது முதல் ...

                                               

உலக பொம்மலாட்ட நாள்

உலக பொம்மலாட்ட தினம் ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது கூத்து வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது. தென்னிந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங் ...

                                               

கல்லச்சுக்கலை

கல்லச்சுக்கலை என்பது எண்ணெயும், நீரும் கலக்காமல் இருக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைக்கலை முறையாகும். இது பெரும்பாலும் கற்களிலோ அல்லது உலோகத்திலோ மென்மையான பகுதியின்மேல் வரையப்படும். இதனை சுண்ணாம்பு அச்சுக்கல் என அழைப்பர். இந்த அச்சுக்கலைப் பாணியை முதன்முதலில் 1796இல் கண்டுபிடித்துச் செயலாக்கியவர் செருமனி நாட்டைச் சார்ந்த நடிகர் அலோய்சு செனெஃபெல்டர் என்பவர். இவர் மேடை நாடக விளம்பரத்திற்காக மலிவான முறையில் படங்களை அச்சிடுவதற்கு இக்கலைப் பாணியைப் பயன்படுத்தினார்.

                                               

கவனகம்

கவனகம் என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலை ஆகும். இதனை வடமொழியில் அவதானம் என்பர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர் கவனகர் எனப்படுகிறார். இவரை வடமொழியில் அவதானி என்பர்.

                                               

காட்சிக் கலை

காட்சிக் கலை என்பது காட்சி அம்சத்துக்கு முதன்மை கொடுக்கும் கலை வடிவத்தைக் குறிக்கும். வரைதல், ஓவியம், சிற்பம், வடிவமைப்பு, கைப்பணி, நவீன காட்சிக் கலைகள், கட்டிடக்கலை என்பன காட்சிக் கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். நிகழ்த்து கலை, கருத்துருசார் கலை, நெசவுக் கலை போன்ற பல்வேறு பிற கலைத்துறைகளும், பிற அம்சங்களுடன் சேர்த்துக் காட்சி அம்சங்களையும் கொண்டிருப்பதனால், இந்த வரைவிலக்கணத்தை இறுக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது. காட்சிக் கலைகளுள், தொழிற்றுறை வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, உள்ளக வடிவமைப்பு, அலங்கரிப்புக் கலை போன்ற பயன்படு கலைகளும் அடங்குகின்றன. மேலே குறிப்பிட்டபடி, காட்சிக் கலை என்பது தற்காலத ...

                                               

குலக்குறிக் கம்பம்

குலக்குறிக் கம்பங்கள், வட அமெரிக்க பசிபிக் கரையை அண்டி, பெரும்பாலும் மேற்கத்திய செஞ்செடார் போன்ற, பெரிய மரங்களிலிருந்து செதுக்கப்படுபவையாகும்.

                                               

கூத்துப்பட்டறை

கூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. சென்னையில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1977ஆம் ஆண்டு நாடக ஆசிரியர் ந. முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் பசுபதி, குரு சோமசுந்தரம்,கலைராணி, இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

                                               

சுவர் ஓவியம்

சுவர் ஓவியம் என்பது சுவரில், கூரையில் அல்லது பெரிய நிரந்தரமான மேற்பரப்பில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கலை வேலைப்பாடான ஓவியமாகும். சுவர் ஓவியத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான பண்பு என்னவெனில், அங்குள்ள இடவெளியின் கட்டட மூலக் கூறுகள் படத்துடன் இசைவாய் உள்வாங்கப்படுவதாகும். சில சுவர் ஓவியங்கள் சுவரில் இணைக்கப்பட்டுள்ள பாரிய திரைச் சீலைகள் மீது வரையப்படுகின்றன. இவ்வாறான ஓவிய வேலைகள் "சுவர் ஓவியம்" என அழைக்கப்படுவதில் கலை உலகில் மாறுபட்ட சில கருத்துக்கள் உள்ளன. ஆயினும் இவ்வாறான நுட்பங்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பொதுவாகக் காணப்பட்டு வருகின்றன.

                                               

நடனம்

நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு. தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி, ஒத்திசை நீச்சல், நடனப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. ...

                                               

நன்றியுரை (நூல்)

நூலாக்கத்துறையில் நன்றியுரை என்பது, குறித்த நூலை அல்லது ஆக்கத்தை உருவாக்குவதில் உதவியோருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு உரை ஆகும். இதற்காக நூல்களில் ஒரு பகுதி ஒதுக்கப்படுவது உண்டு. சில வேளைகளில் நன்றி தெரிவித்தல் ஆக்கியோனின் முன்னுரையின் ஒரு பகுதியாக அமைவதும் உண்டு. நூல் உருவாக்கத்தில் நேரடியான ஈடுபாடு இல்லாமல், நிதியுதவி, திறனாய்வு உதவி, ஆலோசனைகள், ஊக்குவிப்பு போன்றவற்றினூடாகச் செய்யப்படும் உதவி செய்பவர்களுக்கே நன்றியுரைப் பகுதியில் நன்றி தெரிவிப்பது வழக்கு. நன்றி தெரிவித்தலை வகைப்படுத்துவதற்குப் பல முறைகள் உள்ளன. கைல்சும், கவுன்சிலும் 2004 பின்வரும் ஆறு வகைகளைக் குறிப்பிடுகின்றனர். மனத்தளவு ...

                                               

நிகழ்த்து கலை

நிகழ்த்து கலை என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவம் ஆகும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து வேறுபட்டதாகும். இத்தகைய பாகுபாடு ஆங்கில வழக்கில் 1711 முதல் இருந்து வருகிறது. இது பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாயினும் பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கலைவடிவையே குறிக்கும். நுண்மையான உறுப்புகளையும், நுண்ணிய திறன்களையும், நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. கவிதை, இசை, ஆடல், ஓவியம் முதலியன இதனுள் அடங்கும். ஒரு கலைஞனின் நு ...

                                               

நிர்வாணக் கலை

நிர்வாணக் கலை அல்லது ஆடைகளற்ற கலை என்பது மனித உடல்களை ஆடைகளின்றி சித்தரிக்கும் ஓவியம், சிற்பம், ஒளிப்படம் போன்றவற்றைக் குறிக்கும். இவை பாலுணர்வுக் கிளர்ச்சியம் வகையினைச் சாரா. ஆடைகளற்ற ஓவியங்களையும், சிற்பங்களையும் படைக்கும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே உலகின் பல நாகரீகங்களிம் இருந்துள்ளது. கிரேக்க, ரோமப் பண்பாடுகளில் ஆடையற்ற சித்தரிப்புகள் பரவலாக இருந்தன. இந்தியாவில் காஜுராஹோ சிற்பங்களிலும் இவ்வழக்கம் வெளிப்படுகிறது. இக்கலைக்கு மிகப் பரவலாக அறியப்படும் எடுத்துக்காட்டாக ஐரோப்பிய மறுமலர்ச்சி கால சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவின் ”டேவிட்” சிலை இன்றளவும் உள்ளது.

                                               

நுண்கலை

நுண்கலை பயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும். இன்று நுண்கலைகளின் வகைகளில் காட்சிப்படுத்தப்படும் கலை வடிவங்களான ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை,ஒளிப்படக்கலை,பதிப்புக்கலை மற்றும் நிகழ்த்து கலை வடிவங்களான இசை, நடனம், நாடகம் போன்றன முன்னணியில் உள்ளன. ஆயினும் பெரும்பாலான நேரங்களில், குறிப்பாக அருங்காட்சியகங்களில், நுண்கலைகள் என்று குறிப்பிடப்படுவன கலை வடிவங்களான ஓவியம்,சிற்பம் போன்றவற்றையே ஆகும்.

                                               

பாகவதமேளா

இது கருநாடக நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இதில் ஆடலும் பாடலும் உண்டு. பாடுபவன் பாகவதன் எனப்படுவான். குழுவினர் மாலையும் கொலுசும் அணிந்திருப்பர். பாலலீலை, அனுமன் - கருடப் போர் உள்ளிட்ட நிகழ்வுகள் பாடல்களாகப் பாடப்படுகின்றன. மேளம் அடித்துக்கொண்டு ஒவ்வொரு கதைகளாகப் பாடுவர். முன்மேளம், பின்மேளம் என்று இருபிரிவினர் உள்ளனர். முன்பிரிவினர் பாடுவதை கேட்டு பின்மேளப் பிரிவினர் பாடுவர்.

                                               

மாய வித்தை

மாய வித்தை அல்லது செப்பிடு வித்தை என்பது நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று. இது ஒரு நிகழ்த்து கலை. மீவியற்கை போன்று, அல்லது முடியாதது போன்று தோன்றும் செயல்களைச் செய்து பார்வையாளர்களை மகிழ்விப்பதே இக்கலையாகும். இக் கலையைச் செய்பவரை மாய வித்தைக்காரர் அல்லது மந்திரவாதி என்பர். மந்திரமா- தந்திரமா என ஒன்றும் புரியாமல் காண்போரைத் திகைக்க வைக்கும் இக்கலையினைச் சாலவித்தை, இந்திர சாலம், கண்கட்டி வித்தை, மாயவித்தை, கரடி வித்தை, மாஜிக் என்று பலவாறாகக் கூறுவர். செப்பிடு வித்தைக் கலையில் அனைத்துக் காட்சிகளும் ஒளிவு மறைவானவை. காட்சியைக் காண்போர் இதனை உண்மை என நம்பும் வண்ணம் அக்காட்சிகள் அமையும். இக்கலையில் க ...

                                               

வடிவமைப்பு

வடிவமைப்பு என்பது, பொதுவாக பயன்படுகலைகள், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, அழகியல், செயற்பாடு முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, மாதிரியாக்கம், திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் வடிவமைப்பாளர் எனப்படுகிறார். கட்டிடங்கள் மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை ...

                                               

வரைதல்

வரைதல் என்பது காட்சி கலையின் ஒரு வடிவம் ஆகும். இதில் ஒரு நபர் காகிதம் அல்லது மற்றொரு ஈரளவு வெளியில் குறிக்க பல்வேறு வரைதல் கருவிகளை பயன்படுத்துகிறார். உபகரணங்களில் கிராபைட் கரிக்கோல்கள், எழுதுகோல் மற்றும் மை, மை தூரிகைகள், மெழுகு வண்ண கரிக்கோல்கள், வண்ணத்தீட்டுக்கோல்கள், கரி, சுண்ணாம்பு, பேஸ்டல்கள், பல்வேறு வகையான அழிப்பான்கள், குறிப்பான்கள், ஸ்டைலஸ்கள், பல்வேறு உலோகங்கள் மற்றும் மின்னணு வரைதல் போன்றவை அடங்கும். வரைபட கருவி ஒரு மேற்பரப்பில் சிறிய அளவிலான பொருளை வெளியிடுகிறது, இதனால் ஒரு புலப்படும் குறி ஏற்படுகிறது. வரைதலின் மிகவும் பொதுவான ஆதரவாக காகிதம் உள்ளது. எனினும் அட்டை, நெகிழி, தோல் ...

                                               

ஹரிகதா கலாட்சேபம்

ஹரிகதா கலாட்சேபம், திருமாலின் அவதாரக் கதைகளை கூறும் ஹரிகதை என்பது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்த கலவையாகும். மக்களிடையே பக்தி மார்க்கத்தை பரப்புவதில் ஹரிகதா காலட்சேபம் முன்னிலை வகித்தது. ஹரிகதைக்கும், உபன்யாசம் அல்லது ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கும் வேறுபாடு உண்டு. உபன்யாசம் செய்பவர் உரைநடையில் பேசுவதில் மட்டும் வல்லுனராக இருந்தால் போதும். ஆனால் ஹரிகதா காலட்சேபம் செய்பவரோ உரையாற்றுவதிலும், பாடுவதிலும், பாவனைகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும், சமயத்தில் நடன முத்திரைகளை அபிநயிப்பதிலும் கூட வல்லுனாராக இருக்கவேண்டும். மேலும் வடமொழி, தெலுங்கு போன்ற பன்மொழியில் வித்தகராக இருத்தல் மிகச்சிறப்பு. வ ...

ஆர்ப்பாட்டக் கலை
                                               

ஆர்ப்பாட்டக் கலை

ஆர்ப்பாட்டக் கலை என்பது ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை புத்தாக்கச் சிந்தனையோடு நிகழ்த்துவது ஆகும். சமூகப் போராட்டங்களில் செயற்றிறனோடு செயற்படுகின்ற தனிநபர்களும், அமைப்புகளும், குழுக்களும் பரந்துபட்ட அளவில் தங்கள் புத்தாக்கப் படைப்புத் திறனை வெளிப்படுத்திக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்துவார்கள். பதாகைகள், சுவரொட்டிகள், சுவரோவியங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தங்கள் செய்திகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்.

                                               

உம்மதாட்டு

உம்மதாட்டு என்பது கருநாடகத்தின் கலைகளில் ஒன்று. இதை கொடவ இனத்துப் பெண்கள் நிகழ்த்துவர். இவர்கள் கருநாடகத்தின் குடகு பகுதியில் வாழ்கின்றனர். தங்களுடைய பாரம்பரிய ஆடைகளையும், நகைகளையும் அணிந்திருப்பர். மரத்தாலான விளக்குகளைச் சுற்றி, வட்டவடிவில் கூடி நின்று, ஆடுவர். வட்டத்தின் நடுவில், நீர்க் குடத்தை கையில் வைத்திருப்பாண் ஒரு பெண். நடுவில் நிற்கும் பெண், காவிரித்தாயைக் குறிக்கிறது. ஆடும்போது காவிரி வரலாற்றைப் பற்றிய பாடலைப் பாடுவர். பாடல் வரிகளுக்கு ஏற்ப தாளம், இசை வேறுபாடு இருக்கும்.

மரக்கறிச் செதுக்கல்
                                               

மரக்கறிச் செதுக்கல்

மரக்கறிச் செதுக்கலின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மரக்கறிச் செதுக்கல் 700ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சுகோதையில் தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். அதே வேளை இன்னொரு சாரார் அது சீனாவின் ரங் பரம்பரை கி.மு 618-906 யினால் மற்றும் சங் பரம்பரைகி.மு 960-1279யினால் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →