Back

ⓘ சமயம்                                               

சமயம்

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள். இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

                                               

இந்து சமயம்

இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையி ...

                                               

பகாய் சமயம்

பஹாய் நம்பிக்கை 1863 இல் ஈராக்கின் பாக்தாத்தில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பஹாவுல்லா என்பவரால் தொடங்கப்பட்ட சமயமாகும். உலகம் முழுவதும் 200க்குமதிகமான நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பஹாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை ...

                                               

வைணவ சமயம்

வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் 14 வைணவ உபநிடதங்களாகும். இந்த சமயத்தின் முக்கிய ...

                                               

பண்டைய எகிப்தின் சமயம்

பண்டைய எகிப்திய சமயம் பண்டைய எகிப்திய சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. எகிப்திய சமயத்தில் இறப்பிறகு பிந்தைய வாழ்க்கை உண்டு என நம்பிக்கை வலுவாக இருந்தது. எனவே இறந்த பார்வோன்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் உடல்கள் மம்மியாக்கப்பட்டு பதப்படுத்தி வைத்தனர். அனைத்து எகிப்தியர்களும் சூரியக் கடவுளான இரா எனும் கடவுளை வழிபட்டனர். உலகத்தை காத்தருளும் எகிப்திய கடவுள்களான இரா, அமூன், அதின், ஆத்தோர், ஒசைரிஸ், ஓரசு, சேத், இன்பு, சேக்மெட், வத்செட் மூத், கோன்சு, சகுமித்து மற்றும் தாவ் போன்ற கடவுள்களை வழிபட்டனர். மற்றும் தேவதைகளிடம், மக்கள் தங்கள் நலத்திற்கும், இயற்கை பேரழிவு ...

                                               

பாகிஸ்தானில் இந்து சமயம்

பாக்கித்தான் நாட்டு மொத்த மக்கள் தொகையில் 2% மட்டுமே இந்து சமயத்தவர் ஆவார். 1998ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இசுலாமிய சமயத்திற்கு அடுத்த பெரிய சமயம் இந்து சமயம் ஆகும். சிந்து மாகாணத்தில் மட்டும் அதிக அளவில் இந்துக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானிய இந்துக்கள் சிந்தி, சராய்கி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளை பேசுகின்றனர். மத்தியகால வரலாற்றில், பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் போன்ற பகுதிகளை மராத்தியப் பேரரசு மற்றும் சீக்கியப் பேரரசுகள் ஆண்டது.

                                               

தமிழர் சமயம்

தனிமனிதனைக் கடந்து உணர்த்தி நிற்கும் அண்டத்தை அல்லது ஒன்றை உணரும் வழிமுறையின் கட்டமைப்பே சமயம் ஆகும். "சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கருதுகோள். எல்லாத் தமிழரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்தவர்கள் அல்லர். தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறையை, சிந்தனைகளை, நடைமுறைப் போக்குகளை, வரலாற்றை தமிழர் சமயம் என்ற இக்கட்டுரை விளக்க முயலும். தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிரு ...

                                               

இலங்கையில் சமயம்

இலங்கையிலுள்ளவர்கள் பல்வேறு வகையான சமயங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். 70% இலங்கையர்கள் தேரவாத பௌத்தத்தையும், 12.5% இந்து சமயத்தையும், 10% இஸ்லாத்தையும், 7.5% கிறித்தவத்தையும் தங்கள் சமயமாகக் கொண்டுள்ளனர். இலங்கை 3ஆவது சமய நம்பிக்கை கொண்ட நாடாக 2008இல் கல்லொப் வாக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டது. இதில் 99% இலங்கையர் தங்கள் வாழ்வில் சமயம் முக்கியமானது எனத் தெரிவித்தனர்

                                               

இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்

இசுலாத்துக்கு முந்திய அரபு நாட்டில் சமயம், அரேபியாவில் இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியத் தீபகற்பத்தின் அரேபியர்கள், யூதம், கிறித்தவம், சரதுசம், மானி போன்ற சமயங்களையும், பழங்குடி சமயங்களின் உருவச் சிலைகளையும் வணங்கினர். அரபு நாட்டின் பல கடவுள் வணக்க முறையில் தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கினர். அரேபியர்கள் வாழ்ந்த ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மக்காவில் உள்ள கஃபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவை அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் என்பனவாகும். அரேபியர்கள் மக்காவின் கஃபா வழிபாட்டுத் தலத்தின் சுவரில் ஏறத்தாழ 360 தேவதைகளின் சிலைகளை நிறுவி வழிபட்டனர். ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு ...

                                               

மானி சமயம்

மானி சமயம் சாசானியப் பேரரசில், பாரசீகரான மானி என்பவர், கிபி மூன்றாம் நூற்றாண்டில் துவக்கத்தில் இச்சமயத்தை நிறுவினார். நன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு, நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்டங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது. அரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிபாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறத ...

                                               

கொரியாவில் சமயம்

எனும் விக்கித்தரவு ஒளிப்படம் கொரியாவில் சமயம் Religion in Korea பல்வேறுபட்ட மரபுகளை உள்ளடக்குகிறது. கொரியாவின் அல்லது கொரிய மக்களின் உள்நாட்டுச் சமயம் கொரியச் சாமனியம் எனும் வெறியாட்டச் சடங்குகள் ஆகும். கொரிய வரலாற்றில் பழைய நூற்றாண்டுகளில் புத்தமதம் ஓங்கியிருந்த்து. எனினும் இது யோசியோன் பேரரசில் பெரிதும் ஒடுக்கப்பட்டது. இக்காலத்தில் கொரியக் கன்பியூசனியம்அரசு சமயமாக ஆதரிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவாளிகளால் யோசியோன் ஆட்சியின் இறுதிப் பத்தாண்டுகளில் கிறித்துவம் பரப்பப்பட்டது. அப்போது கன்பியூசனியச் சமூகம் வேகமாக குலையலானது. 1945 ஆம் ஆண்டின் கொரியப் பிரிவினைக்குப் பின் வ ...

                                               

சைவ சமயம்

சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது. இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது. திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, பிள்ளையாரும் முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார். பொ.பி 12ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந் ...

                                               

அடையாளப்பொருள் நம்பிக்கை

அடையாளப்பொருள் வழிபாடு என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் சில பொருட்களில் காணப்படுகின்றது என்று எண்ணுவதைக்குறிக்கும். இத்தகைய பொருட்கள் தன்னகத்தே சில சக்தியைக் கொண்டுள்ளன என்றும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களை இவை செய்யவல்லன என்றும் நற்பலன்களை ஏற்படுத்தவல்லன என்றும் மக்கள் ஆதி காலத்திலிருந்து நம்பி வருகின்றனர். அடையாளப்பொருள் வழிபாட்டில், வழிபாட்டிற்குரிய பொருட்கள் உயிருள்ளவையாகவோ, உயிரற்றவையாகவோ, இயற்கையானவையாகவோ, செயற்கையாகவோ இருக்கலாம். பெரும்பாலான பண்பாடுகளில் மண்டையோடுகள், எலும்புகள், செதுக்கப்பட்ட சிற்பங்கள், தனித்தன்மையுடைய கற்கள், மரப்பொருட்கள், கையால் வரையப்பட்ட சித்தி ...

                                               

ஆபிரகாமிய சமயங்கள்

ஆபிரகாமிய சமயங்கள் என்பன ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை தங்கள் பொது மூலமாகக் கொண்டு அல்லது அவரின் காணப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கடவுட் கொள்கை சமயங்களாகும். அவை மூன்று பிரதான ஒப்புநோக்கிய சமயங்களான ஒன்றாக, ஏனைய இந்திய சமயங்கள், கிழக்கு ஆசிய சமயங்களுடன் காணப்படுகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலக சனத்தொகையில் 54% மக்கள் ஆபிரகாமிய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 30% மக்கள் ஏனைய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 16% மக்கள் சமயம் எதுவுமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் ...

                                               

ஆன்மிகம்

ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் பயனுள்ள ஒரு செயற்பாடு ஆகும். இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். ஆன்மிக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகவும், ஐம்புலன்கள் கடந்ததாகவும் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத ...

                                               

இன் காட் வீ டிரஸ்ட் (ஐக்கிய அமெரிக்கா)

இன் காட் வீ டிரஸ்ட் ஐக்கிய அமெரிக்காவின் அலுவல்முறையான குறிக்கோளுரையாகும். புளோரிடா மாநிலத்தின் குறிக்கோளுரையும் இதுவே. இதற்கு முன்னதாக 1782இல் உருவாக்கப்பட்டு ஏற்கப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த இலத்தீன E pluribus unum என்பதே அலுவல்முறையாக அறிவிக்கப்படாத குறிக்கோளுரையாக இருந்து வந்தது; இதற்கு மாற்றாக 1956இல் இன் காட் வீ டிரஸ்ட் நாட்டின் குறிக்கோளுரையாக ஏற்கப்பட்டது. "இன் காட் வீ டிரஸ்ட்" என்ற வாசகம் முதன்முதலில் 1864இல் இரண்டு சென்ட் நாணயத்தில் அச்சிடப்பட்டது. 1957 முதல் அனைத்து காகித பணத்தாள்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. இதனை சட்டமாக 84வது பேரவை தீர்மானம் எண் ...

                                               

உருவ வழிபாடு

உருவ வழிபாடு என்பது சிலை அல்லது படிமம் போன்ற இயற்பிய வடிவத்தின் ஊடாக இறைவனை வணங்குவது ஆகும். கிறித்தவம், இசுலாம், யூத மதம் போன்ற ஆபிரகாமிய மதங்களில் உருவங்களை வழிபடுவது, கடவுள் எனக் கருதிக்கொண்டு கடவுள் அல்லாத ஒன்றை வழிபடுவதைக் குறிக்கும். மேற்குறிப்பிட்ட மதங்களிலும், ஒரு கடவுட் கொள்கையுடைய பிற மதங்களிலும் உருவ வழிபாடு பொய்க் கடவுள்களை வணங்குவது எனக் கருதி அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம் போன்ற இறைக் கொள்கையைப் பின்பற்றுவனவும், பின்பற்றாதனவுமான இந்தியச் சமயங்கள் உருவங்களை இறைவனாக அன்றி இறைவனுக்குக் குறியீடாகக் கொள்கின்றன, அல்லது அவை ஆன்மீகக் கருத்துக்களின் குறி ...

                                               

உலகச் சமயங்களின் பாராளுமன்றம்

உலகச் சமயங்களின் பாராளுமன்றம் என்ற பெயரில் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இவற்றுள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, 1893 இல் சிக்காகோவில் இடம்பெற்ற கூட்டம் ஆகும். உலக மத நம்பிக்கைகளிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான முதல் முயற்சி இதுவாகும். இந்த நிகழ்வு, அதன் நூற்றாண்டு நிறைவான 1993 ஆம் ஆண்டில் இன்னொரு உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயர் தாங்கிய கூட்டம் ஒன்றால் நினைவு கூரப்பட்டது. இது, உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயரில் தொடர் கூட்டங்கள் நடப்பதற்கு வித்திட்டது.

                                               

ஐயுறவியல்

ஐயுறவியல் என்பது ஒரு விளக்கத்தை நம்பிக்கையால் அல்லது அதிகாரத்தால் ஏற்றுக்கொள்ளாமல் ஐயுறவு அல்லது சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்து, ஆதாரங்களைத் தேடும் முறைமையக் குறிக்கிறது. சில விடயங்களில் தெளிவான முடிவுகள் இல்லாவிட்டால் அது தொடர்பாக இறுதியான முடிவுகள் எட்டாமல், ஐயமுற்று தொடர்ந்து தேடுவது ஐயுறவியல் பண்பு ஆகும். ஐயுறவியல் மூடநம்பிக்கைகள், சமய நம்பிக்கைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைக் முன்வைக்கிறது.

                                               

கான்ஷான்

கான்ஷான் அல்லது Cánwáng 蚕王 "பட்டுப்புழு ஆட்சியாளர்") என்பது சீன மதத்தில் பட்டுப்புழு மற்றும் பட்டு வளர்ப்பின் தெய்வம். பட்டுவளர்ப்பில் இரண்டு முக்கிய கேன்ஷென் உள்ளனர். இவர்கள் சீனாவில் பட்டு வளர்ப்பு கண்டுபிடிப்பு மற்றும் பரவலுக்குப் பங்களித்த இரண்டு புராண-வரலாற்று ஆளுமைகள் ஆவார்கள். Cǔnmǔ 蚕母, "பட்டுப்புழுவின் தாய்", ஒரு தெய்வம், இதன் வழிபாட்டு முறை ஹவுட்டு "பூமியின் இராணி" மற்றும் சான்சியாவோ "மூன்று வானம்" தெய்வங்களுடன் தொடர்புடையது. இவர் காங்கே 蚕姑 என்றும் அழைக்கப்படுகிறார். "பட்டுப்புழு மெய்டன் ", மற்றும் லீஸே 嫘祖, ஹுவாங்க்டியின் மனைவி, பிரபஞ்சத்தின் மையத்தின் தெய்வம் மற்றும் அனைத ...

                                               

சமய வன்முறை

சமய வன்முறை அல்லது தீவரவாதம் என்பது சமயம் காரணமாகவும் அல்லது சமயத்துக்கு எதிராகவும் இடம்பெறும் வன்முறை ஆகும். குறிப்பாக சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், நூல்கள் போன்றவற்றால் உந்தப்படும் வன்முறை சமய வன்முறை ஆகும். அல்லது குறிப்பிட்ட சமயங்களுக்கு எதிராக பிற சமயத்தாரால் மற்றும் சமயம் சாராதாரால் முன்னெடுக்கப்படும் வன்முறையையும் இது குறிக்கும். உலக வரலாற்றில் நடந்த நடக்கும் பல போர்களில் சமயம் முதன்மை அல்லது துணைக் காரணமாக அமைந்துள்ளது.

                                               

சமயங்கள் மற்றும் ஆன்மிக மரபுகளின் பட்டியல்

இஸ்லாம் – 110 கோடி டாவோயிசம் – 5.0 கோடி சீக்கியம் – 90 இலட்சம் இந்து சமயம் – 105 கோடி கிறிஸ்தவம் – 210 கோடி கத்தோலிக்க திருச்சபை – 100 கோடி; புரடஸ்தாந்தம் – 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை – 24.0 கோடி ஷிந்தோ – 3.0 கோடி பௌத்தம் – 35.0 கோடி சோறாஸ்ரியனிசம் கன்பூசியம் – 40.0 கோடி சமணம் – 60 இலட்சம் யூதம் – 1.2 கோடி பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்

                                               

சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்

வேர்ல்ட் பெக்ட்புக் அமைப்பின் கருத்துப்படி, உலகக் குடித்தொகை 7.095.217.980 மக்களில், கிறித்தவர் 31.50%உம், இசுலாமியர் 22.74%உம், இந்துக்கள் 13.8%உம், பௌத்தர் 6.77%உம், நெறியிலார் 9.66%உம், இறைமறுப்பர் 2.01%உம் அடங்குவர்.

                                               

சமயத் துன்புறுத்தல்

சமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும். சமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன் பாதுகாப்பு அல்லது விருப்பத்திற்கு எதிராக குறித்த சமயக் குழுவைக் கருதும்போது ஏற்படலாம். பல நாடுகளில் சமயத் துன்புறுத்தல் பெரும் வன்முறையினைத் தோற்றுவித்து மனித உரிமை பிரச்சனையாக கருதப்பட்டுள்ளது.

                                               

சமயநெறி ஆறு

சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் மணிமேகலை. இதில் 30 காதைகள் உள்ளன. அவற்றில் 27ஆவது காதையில் ஆறு வகையான சமயநெறிகளைப்பற்றி விளக்கமான செய்திகள் உள்ளன. மணிமேகலை பௌத்த சமயத்தவள். மணிமேகலை சோழநாட்டுக் காஞ்சிபுரத்திலிருந்து சேரநாட்டு வஞ்சிமாநகருக்குச் செல்கிறாள். அங்குச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு அமைத்த படிமத்தைக் கண்டு கதறி அழுகிறாள். கண்ணகி சிலை பேசுகிறது. புத்தனின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. தாயின் சொற்படி மாற்றுருவம் கொண்டு சமயக் கணக்கர்தம் திறம் கேட்கிறாள். தன் சமயமல்லாத ஐந்து சமயங்களின் திறத்தை அறிந்துகொள்கிறாள்.

                                               

சிந்தோ

சிந்தோ என்பது சப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள் படும் சப்பானிய மொழிச் சொல்லாகும். இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது. இம்மதம் பல கடவுள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.

                                               

தமிழ்ச் சமயம்

தமிழ்ச் சமயம் அல்லது தமிழ் மதம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும். தமிழர்கள் தமிழ்நாடு மற்றும் ஈழம் மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரியூனியன், மியான்மர், மொரீஷியஸ், மடகாஸ்கர் மற்றும் ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப ...

                                               

தெங்கிரி மதம்

தெங்கிரி மதம் என்பது ஒரு நடு ஆசிய மதம் ஆகும். ஷாமன் மதம் உள்ளிட்ட பல மதங்கள் ஒரு தொகுப்பாக தெங்கிரி மதம் என்று அழைக்கப்படுகின்றன. இது துருக்கியர்கள், மங்கோலியர்கள், ஹங்கேரியர்கள், சியோக்னு, ஹூனர்கள் மற்றும் பண்டைய ஐந்து துருக்கிய மாநிலங்கள்: கோதுர்க் ககானேடு, மேற்கு துருக்கிய ககானேடு, பெரிய பல்கேரியா, பல்கேரியப் பேரரசு மற்றும் கிழக்கு துருக்கியா ஆகியவற்றின் மதம் ஆகும். துருக்கிய புராணமான இர்க் பிடிக்கில், தெங்கிரி துருக் தங்ரிசி என்று குறிப்பிடப்பட்டுள்ளார். 1990களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு தெங்கிரி மதம் நடு ஆசியாவின் துருக்கிய நாடுகளின் அறிவுசார் வட்டங்களில் பரிந்துரைக்கப்படு ...

                                               

நம்பிக்கையற்றோர்

நம்பிக்கையற்றோர் அல்லது அசுவாசிகள் என்பது சமயத்தில் நம்பிக்கையற்றவர்களைக் குறிக்கும் சொல் ஆகும். ஆங்கில சொல்லான infidel இணையாக இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களில் நம்பிக்கையற்றோரை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

                                               

பெரிய சமயக் குழுக்கள்

                                               

மெசியா நம்பிக்கை யூதம்

மெசியா நம்பிக்கை யூதம் என்பது ஒரு 1960 மற்றம் 1950களில் உருவாகிய சமய இணைப்பு இயக்கமாகும். இது நற்செய்தி அறிவிப்பு கிறிஸ்தவ இறையியலுடன் யூத நடைமுறை மற்றும் சொல்லியல் மூலங்களை ஒன்றிணைக்கிறது. மெசியா நம்பிக்கை யூதமானது இயேசு யூதரின் மெசியா மற்றும் மகனாகிய கடவுள் ஆகிய இரண்டையும் கருத்துக்களையும் பொதுவாகக் கொண்டுள்ளது. ஆயினும், சிலர் திரித்துவம் பற்றிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. சில மறுப்புக்களுடன், தனாக் மற்றும் புதிய ஏற்பாடு என்பன அதிகாரபூர்வமானதும் தெய்வத்தன்மையான தூண்டுதலுக்குள்ளான வேதப்புத்தகம் என நம்பப்படுகின்றது. இயேசுவை ஒரே கடவுளின் மீட்பராக ஏற்றுக் கொள்வதனூடாக மீட்பினை அடைய முடி ...

                                               

வூடூ

வூடூ அல்லது எயிட்டிய வூடோ, கரிபிய நாடான எயிட்டியில் தோன்றிய ஓர் கலவை சமயமாகும். இது மேற்கு ஆபிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது. 16வது நூற்றாண்டில் எயிட்டிக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகளால் இந்த சமயம் தோன்றியது; தங்கள் மரபு சார்ந்த நம்பிக்கைகளை விட முடியாமலும் அதேநேரம் தங்கள் எசமானர்களின் சமய நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டி வந்ததாலும் இந்தச் சமயம் உருவானது. இந்தச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வூடோசோ என அழைக்கப்படுகின்றனர்.

                                               

ஷாமன் மதம்

ஆவி வழிபாட்டாளர்கள் அல்லது ஷாமன் மதம் என்பது ஒரு மதம் அல்லது பழக்கமாகும். இதில் ஒரு ஷாமன் அல்லது பயிற்சியாளர் மனநிலை மாறிய நிலைகளை அடைந்து, ஒரு ஆவி உலகத்தை உணர்ந்து, அதனுடன் தொடர்புகொண்டு அதன் ஆழ்ந்த ஆற்றல்களை இவ்வுலகிற்குக் கொண்டு வருகிறார். ஒரு ஷாமன் என்பவர் நல்ல மற்றும் தீய ஆவிகள் உலகை அணுகக்கூடியவராகவும், செல்வாக்கு செலுத்துபவராகவும் கருதப்படுகிறார். பொதுவாக ஒரு சடங்கின் போது தன் நினைவிழந்த நிலைக்குள் நுழைகிறவராகவும், சோதிடம் சொல்பவராகவும் மற்றும் குணமடைய வைப்பவராகவும் கருதப்படுகிறார். "ஷாமன்" என்ற சொல் வடக்கு ஆசியாவின் துங்குசிக் எவங்கி மொழியில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கருதப் ...

                                               

பிவிட்டி

மேற்கு ஆப்பிரிக்காவில் முதன்மையான சமயங்களில் பிவிட்டி யும் ஒன்று. காபோன், காமரூன் ஆகிய நாடுகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. இது காபோன் தேசத்து அதிகாரப்பூர்வ சமயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பண்பாட்டில் கிறித்தவ சமயத்தின் தாக்கமும் காணப்படும். யாரேனும் ஒருவர் குழுவிற்கு தலைமையேற்று, பண்டிகைகளையும் சடங்குகளையும் நடத்துவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →