Back

ⓘ சமூகம்                                               

சமூகம்

சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதை பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட் ...

                                               

ஆசியச் சமூகம்

ஆசியச் சமூகம் Asiatic Society சனவரி 15, 1784இல் வில்லியம் ஜோன்சால் நிறுவப்பட்டது; பிரித்தானிய இந்தியாவின் அப்போதையத் தலைநகராக விளங்கிய கொல்கத்தாவில் இருந்த வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கிய இராபர்ட் சாம்பர்சு தலைமையில் நடந்த கூட்டத்தில் கிழக்கத்திய பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்தறியும் நோக்குடன் இது நிறுவப்பட்டது. 1832இல் இதன் பெயர் "வங்காளத்தின் ஆசியச் சமூகம்" Asiatic Society of Bengal எனப் பெயர் மாற்றப்பட்டது; மீண்டும் 1936இல் இது "வங்காளத்தின் அரச ஆசியச் சமூகம்" எனவும் இறுதியாக சூலை 1, 1951இல் தற்போதுள்ளவாறு ஆசியச் சமூகம் என்றும் மாற்றப்பட்டது. இச்சமூகம் கொல்க ...

                                               

இரகசிய சமூகம்

யார் எதற்காக என்பதை வெளிப்படுத்தாமல் மறைவில் இயங்கும் சமூகம் அல்லது குழுவை இரகசிய சமூகம் அல்லது இரகசியக் குழு எனலாம். சில இரகசிய சமூகங்களில் சில தகவல்கள் அல்லது செயல்பாடுகள் அறியப்படக்கூடியதாக இருந்தாலும் அவர்களின் முக்கிய செயல்பாடுகள் மறைக்கப்படிருக்கும். ஒரு நாட்டின் புலனாய்வுத் துறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தாலும், இரகசிய சமூகம் என்னும்பொழுது விடுதலைக் கட்டுநர், இல்லுமினாட்டி போன்ற சமூகங்களையே சிறப்பாக குறிக்கும். இளகிய நோக்கங்களுக்காக அமைக்கப்படும் சில மாணவ அமைப்புகளும் இரகசியமாக செயல்படுவதுண்டு.

                                               

போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்

போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம் அல்லது போர்த்துக்கேயம் பேசும் நாடுகளின் குமுகம் போர்த்துக்கேய மொழி அலுவல் மொழியாக உள்ள நாடுகளுக்கிடையே நட்புறவு பேணும் அரசுகளுக்கிடை அமைப்பாகும்.

                                               

இலங்கையின் அரச ஆசியர் சமூகம்

இலங்கையின் அரச ஆசியர் சமூகம் இலங்கையின் கொழும்பு நகரில் அமைந்துள்ள ஓர் அமைப்பு. அறிவு வளர்ச்சிக்கான தொன்மையான இலங்கைச் சமூகங்களில் ஒன்றான இது 160 ஆண்டு கால வரலாற்றை உடையது. 1845 பெப்ரவரி 7 இல் நிறுவப்பட்ட இந்தச் சமூகம், பெரிய பிரித்தானியா, அயர்லாந்துகளின் அரச ஆசியர்ச் சமூகத்தை ஒட்டி கிழக்கத்திய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இலங்கைக் கிளையாக அமைக்கப்பட்டது.

                                               

சமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு

பாலின வேறுபாட்டை சமூகம் உருவாக்குகின்றது என்ற கருத்து பாலினம் குறித்த பல மெய்யியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளில் இடம் பெறுகின்றது. இக்கருத்தியலின்படி, சமூகமும் பண்பாடும் பாலினச் செய்கைகளை உருவாக்குகின்றன; சமூகமும் பண்பாடும் ஒரு குறிப்பிட்ட பாலருக்கு பொருத்தமான அல்லது ஆதர்ச செயற்பாடுகளை வரையறுக்கின்றன என்பதாகும். இதில் தீவிரக் கருத்துக் கொண்டவர்கள் ஆடவருக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் முழுமையாக சமூக பழக்கங்களால் ஆனவையே என்று வாதிடுகின்றனர்; மற்றவர்கள் உயிரிக் கூறுகள் வரையறுக்கும் சில நடத்தைகளைத் தவிர பிற செயற்பாடுகளை சமூகம் கட்டமைக்கின்றது என்கின்றனர். வேறு சிலர் பொதுவாக கருத்தில் க ...

                                               

அழிப்புவாதம்

அழிப்புவாதம் என்பது ஒரு அரசியல் எதிரி தனது நாட்டுக்கு அல்லது சமூகத்துக்கு மிகக்கேடானது எனக் கருதி, அந்த தரப்பை ஒடுக்கி வைக்க, பிரித்து வைக்க, தணிக்கை செய்து வைக்க, அல்லது நேரடியாக அழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைச் சுட்டும் கொள்கை ஆகும். இக் கருத்துருவை அமெரிக்க அரசறிவியல் அறிஞர் டானியேல் கோல்ட்கேகன் 1996 தனது நூலில் முன்வைத்தர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →