Back

ⓘ நலம்                                               

நலம்

நலம் என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமன்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக சுகாதார அமைப்பின் ஒட்டாவா நல மேம்பாட்டுப் பட்டயம் போன்ற ஆவணங்களில் கொடுத்துள்ள வரைவிலக்கணங்களும் பயன்படுகின்றன. மேற்படி பட்டயம், நலம் அன்றாட வாழ்கைக்கான ஒரு மூல வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல என்றும் அது தனிப்பட்ட, சமூக வளங்களுக்கும், உடற் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நேர்க் கருத்துரு என்றும் கூறுகிறது. வகைப்பாட்டு முறைகளும் நலம் என்பதை விளக்குகின் ...

                                               

யாவரும் நலம்

யாவரும் நலம் 2009 இல் வெளிவந்த இந்திய தமிழ், இந்தி திரைப்படம் ஆகும். விக்ரம் குமார் இயக்கத்தில் விக்ரம் குமார், நீலு ஐயப்பன், அபினவ் கஷ்யப் போன்றவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதனை பிக் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மாதவன், நீத்து சந்திரா, சச்சின் ஹெடக்கர், தீபக் டோப்ரியால், முரளி சர்மா, ரிட்டிமேன் சட்டர்ஜி, சம்பத் ராஜ் மற்றும் சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2009 மார்ச் 6 அன்று வெளியானது.

                                               

கூகிள் நலம்

கூகிள் நலம் என்பது 2008 ஆம் ஆன்டில் கூகுள் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட தனிநபர் சுகாதார சேவை தகவல் மையம் ஆகும். இந்தச் சேவையானது 2011 ஆம் ஆண்டில் கூகிள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது. இந்த சேவையினை கூகிள் பயனர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் கைமுறையாகவோ அல்லது சேவை பங்குதாரர்களின் சேவையாளர் கணக்கில் புகுபதிகை செய்வதன் மூலமோ தங்களது உடல்நலன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் ஒழுங்கமைத்துப் பகிர கூகிள் நலம் வழிவகை செய்கிறது. இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அ ...

                                               

கனடாவில் நலம் பேணல்

கனடாவில் நலம் பேணல் என்பது மக்களின் உடல் உள சமூக நலம் எவ்வாறு கனடிய நாட்டில் பேணப்படுவது என்பது பற்றிய கட்டுரை. கனடாவில் முழுப்பொது நலம் பேணல் முறைமை உள்ளது. அதாவது ஒருவருக்கு அவசியமான அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் அவரின் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் அரசே நிதி வழங்கும். OECD நலம் பேணல் தரத்தில் கனடா நான்காவது இடத்தில் இருக்கிறது. இது இதன் சிறந்த நலம் பேணல் முறைக்குச் சான்றாகும்.

                                               

நலம் பேணல்

நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியல் மற்றும் இதர மருத்துவத்துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கும் இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நலத்தைப் பேணுவதாகும்.

                                               

பொது உடல்நலவியல்

பொது நலம் அல்லது பொதுச் சுகாதாரம் என்பது ஒரு சமூகத்தின் நலத்தையும், அதை ஏற்படுத்தி தரும் நல முறைமையும் குறிக்கிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்தல், மருத்துவ சேவை, உணவு, நீர் தரக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலைப் பேணல், அரசியல் பண்பாட்டு பொருளாதார நலத்தைப் பேணல் என பல பொது நலக் கூறுகள் ஒரு தனிநபரின் உடல் உள நலத்தை தீர்மானிக்கிறது. பொது நலத்தை பேண வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளை கையாளுகின்றன. அவற்றின் தரமும் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. கனடா, சுவீடன் போன்ற நாடுகளில் அரசு பொது நலம் தொடர்பான முழுமையான பொறுப்பையும் செலவையும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. பிற பல மேற்குநாடுகளிலும், சீனா, கியூபா ...

                                               

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஜெயதேவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

ஜெபம்

ஜெபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதாகும். நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரை மந்திரமாக தேர்ந்த்தெடுத்துக்கொள்ளலாம். கை விரல் அல்லது ஏதாவது ஒரு மாலையின் உதவியுடன் ஜெபம் செய்யலாம். ஜெபம் செய்வதால் உடல் நலம் மன நலம் ஆகியன கிடைக்கின்றன. டென்சன் குறைகின்றன. முதன் முதலில் ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக செய்து வருவது நல்லது. யோகா தியானம் போன்றவற்றைச் செய்ய நேரம் காலம் ஆகியன கவனித்துதான் செய்ய வேண்டும் ஆனால் ஜெபம் செய்ய எந்த விதக் கட்டுப்பாடும் தேவையில்லை. இதை தாங்களே அனுபவத்தில் உணரலாம். ஜெபம் செய்பவர்களின் நம்பிக்கை ஜெபத்தினால் பலன்கள் கிடைப்பது எ.கா: நோயாளிகள ...

                                               

இந்தியாவில் மகளிர் நலம்

இந்தியாவில் மகளிர் நலம் Womens health in India என்பது புவியியல் கூறுகள், சமூகப் பொருளாதார நிலை, பண்பாடு போன்ற பல்வேறு சுட்டிகள் மூலம் ஆராய்ந்தறியப்படுகிறது. இந்தியாவில் மகளிர் நலத்தை மேம்படுத்த உலகளாவிய நலவாழ்வுச் சராசரியோடு இந்திய ஆண்களின் நலவாழ்வும் ஒப்பு நோக்கப்பட்டு, அதன் பல்வேறு பரிமாணங்களும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். மனித உடல்நலத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் ஒரு முன்னிலைக் காரணியாக மனித நலம் திகழ்கிறது. தற்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இந்தியாவில் மகளிர் பல்வேறு நலக்குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். மகளிர் நலத்தை மேம்பட ...

                                               

கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு என்பது ஒரே நோக்கத்திற்காக மக்கள் ஓரிடத்தில் கூடி இறையை வேண்டுவதாகும். இவ்வழிபாடானது மக்களின் பொது நோக்கங்களான மழை வேண்டுதல், உலக மக்களின் நலம் வேண்டுதல்" என்பதைப் போன்று பொதுமையாகவோ, தனி நபர்களின் உடல் நலம் வேண்டியோ இருக்கலாம். பிரபலங்களின் உடல் நலத்திற்காக அவர்களின் ரசிகர்களும், நலம் விரும்பிகளும் இவ்வாறான கூட்டு பிராத்தனைகளில் ஈடுபடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக கூட்டுப் பிராத்தனை செய்ய வேண்டி அவர்களின் உறவினர்கள், கூட்டுப் பிராத்தனைக்கென இருக்கும் குழுக்களை வழியுறுத்தியும் இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள். இவ்வழிபாட்டு முறைகளில் அமைதியாக இறையை வேண்டுதலும், இசையோடு க ...

                                               

வனவாசி கல்யாண் ஆசிரமம்

வனவாசி கல்யாண் ஆசிரமம் இந்தியாவின் வாழும் மலைவாழ் பழங்குடி மற்றும் உள்நாட்டுப் பழங்குடி சமூக மக்களின் உடல் நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குச் செயல்படும் தன்னார்வத் தொன்ண்டு நிறுவனம் ஆகும். இதன் கிளைகள் இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இதன் தலைமையிடம் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் நகரம் ஆகும். 1952-இல் இதனை நிறுவியவர் இரமா காந்த் தேஷ்பாண்டே ஆவார். இந்நிறுவனத்தின் தாய் அமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும். இந்நிறுவனம் நகரங்களிலிருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமபுறங்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் வேளாண்மை, உடல் நலம், கல்வி வசதிகள் வழங்குகிறது.

                                               

மகளிர் நலம்

மகளிர் நலம் என்பது பெண்களின் நலவாழ்வைக் குறிக்கிறது. மகளிர் நலம் பலவகைகளில் ஆடவர் நலத்தில் இருந்து வேறுபடுகிறது. மகளிர் நலம் மக்களின் நலவாழ்வை மறைமுகமாகச் சுட்டும் சுட்டியாகும். உலக நலவாழ்வு நிறுவனம் நலவாழ்வை "நோயற்ற வாழ்வாகக் கூறாமல், முழு உடல், மன, சமூக நலவாழ்வாக வரையறுக்கிறது. இது குறிப்பாகவும் பொதுவாகவும் மகளிர் இனப்பெருக்க நலவாழ்வைக் குறிப்பதாக்க் கருதினாலும், பல குழுக்கள் மகளிரின் ஒட்டுமொத்த நலவாழ்வைக் குறிக்கும் அகல்விரிவான வரையறைக்காக வாதாடிவருகின்றனர். வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் நலவாழ்வு வேறுபாடுகள், பெண்கள் எதிர்கொள்ளும் இடர்கள், பட்டறிவைச் சார்ந்து மேலும் கூர்மையட ...

                                               

அல்மா ஆட்டா பிரகடனம்

அல்மா ஆட்டா பிரகடனம் என்பது ஆரம்ப சுகாதார கவனிப்பு அல்லது முதல்நிலை சுகாதார கவனிப்பை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்துலகப் பிரகடனம் ஆகும். 1978 ஆம் ஆண்டில் கசகஸ்தானில் அல்மா ஆட்டா எனும் இடத்தில் நடந்த மாநாட்டில் இப்பிரகடனம் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

                                               

இரத்தக் கொழுப்பு

இரத்தக் கொழுப்பில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை பெரும்பாலும் ‘தீய’ கொழுப்பு எனக் குறிப்பிடப்படுகிற குறையடர்த்தி கொழுமியப்புரதம். ‘நன்மை புரியும்’ கொழுப்பு என அறியப்படும் உயரடர்த்தி கொழுமியப்புரதம்), கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகள். குறையடர்த்தி கொழுமியப்புரதம் தமனிச் சுவர்களில் கொழுப்புச் படிவத்தை படியச் செய்கிறது. அதே சமயம் "உயரடர்த்தி கொழுமியப்புரதம் தமனி, நாடிகளை சுத்தப்படுத்த உதவுகிறது. டிரைகிளிசரைடு எனப்படும் இரத்தக் கொழுப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒன்று. ஆனால் அதிக டிரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பு பெண்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கலாம். அதிக உடற் பருமன் அ ...

                                               

கொசு ஒழிப்பு

கொசு ஒழிப்பு என்பது கொசுக்களால் மனித உடலுக்கு ஏற்படும் மலேரியா, டெங்கு காய்ச்சல் சிக்குன்குனியா நோய்களை தடுக்க கொசுக்களை கட்டுப்படுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். கொசுக்கள் மக்களைக் கடிக்காமல் கொசு வலைகள் பாதுகாக்கின்றன. தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது கடினமான சூழலில் கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

                                               

நல உரிமை

நல உரிமை என்பது ஒருவருக்கு எங்கிருந்தாலும் இருக்கும் அடிப்படை நலத்துக்கான உரிமை ஆகும். இது ஒரு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமை ஆகும். இந்த உரிமை உலக மனித உரிமைகள் சாற்றுரை, அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை உட்பட்ட பல்வேறு அனைத்துலக உடன்படிக்கைகள் ஊடாக நிலைநாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த உரிமையை நிறைவேற்றுவது தொடர்பாக நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் உண்டு.

                                               

மின் நலப் பதிவு

மின் நலப் பதிவு என்பது எண்மிய முறையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபரின் நலம் தொடர்பான தகவல்கள் ஆகும். மின் பதிவுகள் கணினியில் இலகுவாக சேமி்த்து, மீட்கக் கூடியவை. இணையம் ஊடாக பகிரப்படக்கூடியவை. ஆகையால் மின் நலப் பதிவுகளை பல நாட்டு நலத்துறைகள் நடைமுறைப்படுத்திவருகின்றன. மின் நலப் பதிவுகள் ஒரு நபரின் நல வரலாறு, மருந்துகள், ஒவ்வாமைகள், பரிசோதனை முடிவுகள், படிமங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி சேமித்து மீட்டெடுத்து காட்டவல்லது. நபர்களுக்கு முன் அறிவித்தல்கள், மருந்த்துவரூடான சந்திப்பு நிகழ்வுகள் போன்றவற்றை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக இவை செய்யக்கூடிவை.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →