Back

ⓘ வரைபடங்கள்



                                               

கட்டிட வரைபடங்கள்

கட்டிடக்கலைஞனின் கற்பனையில் உதித்த கட்டிடமொன்று எப்படி இருக்கப்போகிறது என்று மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்காக வரையப்படும் படங்களே கட்டிட வரைபடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்யத் தொடங்கியதிலிருந்து அது கட்டிமுடியும்வரை பல்வேறு நோக்கங்களூக்காக வரைபடங்கள் வரையப்படுகின்றன. பின்வரும் சந்தர்ப்பங்களில் வரைபடங்கள் தேவைப்படுகின்றன. கட்டிடக்கலைஞனின் கற்பனையில் உதிக்கும் எண்ணங்களுக்குப் பார்க்கக் கூடிய வடிவம் கொடுத்து அவற்றைப் பதிவுசெய்வதற்கும், துண்டுதுண்டாக உதிக்கும் இவ்வாறான எண்ணங்களை ஒன்றுபடுத்திப் பரிசோதிப்பதற்கும், பருமட்டான கைவரைபடங்கள் வரையப்படுகின்றன. இது வடிவமைப் ...

                                               

எலிங்கம் வரைபடங்கள்

ஓர் எலிங்கம் வரைபடம் என்பது வெப்பநிலை சார்ந்து சேர்மங்களின் நிலைப்புத்தன்மையைக் காட்டும் ஒரு வரைபடம் ஆகும். இந்த பகுப்பாய்வானது, வழக்கமாக உலோக ஆக்சைடு மற்றும் சல்பைடுகளின் ஒடுக்க வினைகள் நிகழ்வதற்கான சாத்தியத்தின் தன்மையை மதிப்பிட பயன்படுத்தப்படுகின்றன. இந்த வரைபடங்கள் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டில் பிரித்தானிய வேதியியலாளர் எரால்ட் எலிங்கமால் உருவாக்கப்பட்டன. உலோகவியலில், எலிங்கம் வரைபடமானது ஒரு உலோகம், அல்லது அதன் ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றிற்கு இடையேயான சமநிலை வெப்பநிலையை அனுமானிக்க பயன்படுகிறது. மேலும், இதே வரைபடங்கள், கூடுதலாக, உலோகங்களின் நைட்ரசன் மற்றும் கந்தகம் போன்ற அலோகங்களு ...

                                               

வீழ்ப்பு வரைபடங்கள்

பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பொருள் அல்லது காட்சி பற்றிய விபரங்களைத் தரும் வகையில் அவற்றின் தோற்றங்களை இரு பரிமாணத் தளங்களில் காட்டும் வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்கள் எனப்படுகின்றன. வீழ்ப்பு வரைபடங்கள் பலவகைப் படுகின்றன. அவற்றுட் சில பொருட்களினதும், காட்சிகளினதும் இயல்புகளை இரு பரிமாணத் தோற்றத்தில் வெளிப்படுத்த, வேறு சில அவற்றின் முப்பரிமாண இயல்புகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. கட்டுமான வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

                                               

நிலப்படம்

நிலப்படம் அல்லது வரைபடம் என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவிஅரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை, அளவுவிகிதத்துக்கு அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில், வரையப்படுகின்றது. இதனைக் குறிக்க, தேசப்படம், வரைபடம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. உலகக் கோள மாதிரிகளில், நிலப்படம் ஒரு கோள மேற்பரப்பில் வரையப்படுகின்றது. நிலப்படவரைவியல் என்பது நிலப்படங்களை வரைவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். முக்கியமான நிலப்படவகைகளிலே தரைத்தோற்ற வரைபடங்கள் அடங்குகின்றன. இவை புவியின் நில மேற்பரப்பு, கரையோர மற்றும் கடல்சார்ந் ...

                                               

வரைகலை

வரைகலை குறித்த ஒரு மேற்பரப்பில் ஆக்கப்படும் விழிப்புலன்சார் காட்சியமைப்பு ஆகும். இங்கு மேற்பரப்பாக காகிதம், சுவர், துணி, கணினித்திரை என பலவேறுபட்ட பரப்புக்கள் கொள்ளப்படலாம். ஒளிப்படங்கள், ஓவியங்கள், கோட்டுஓவியங்கள், வரைபுகள், வரைபடங்கள், கேத்திரகணித உருவமைப்புக்கள், உலகப்படங்கள், பொறியியல் வரைபுகள், மற்றும் பல்வேறுபட்ட உருவங்கள் வரைகலைக்கான உதாரணமாக அமைகின்றன. இன்றைய உலகில் வரைகலையானது எங்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்த விடயம் ஒன்றை தெளிவாக விளக்குவதற்கும். திறன்வாய்ந்த தொடர்பாடலுக்கும் உதவுகின்றது. ஒவ்வொரு துறையிலும் தனியே எழுத்துக்களினூடான விளக்கத்தை தவிர்த்து குறுகிய இடத்தில் அ ...

                                               

இருபரிமாண வரைபடம்

இருபரிமாண வரைபடம் என்பது இருபரிமாண வெளியில் அமைந்த புள்ளிகளின் கணமாகும். அப்புள்ளிகள் ஒரு மெய்ச்சார்பின் மதிப்புகளாக இருந்து, காட்டீசியன் ஆள்கூற்று முறைமையும் பயன்படுத்தப்படுத்தப்பட்டால், காட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் இரு அச்சுகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மெய்மாறியின் மதிப்புகளைக் குறிக்கும். கிடைமட்ட அச்சு குறிக்கின்ற மாறியானது x எனவும், அவ்வச்சு x -அச்சு எனவும் அழைக்கப்படுகிறது. நிலைக்குத்து அச்சு குறிக்கின்ற மாறியானது y எனவும், அந்த அச்சானது y -அச்சு எனவும் அழைக்கப்படுகிறது. இரு அச்சுகளும் குறிக்கும் மாறிகள் மெய்மாறிகளெனில், வரைபடத்தின் மீதமையும் ஒவ்வொரு புள்ளியும் இரு மெய்மாறிகளி ...

                                               

தொடர்நிகழ்வு வரைபடம்

தொடர்நிகழ்வு வரைபடம் என்பது ஒருங்கிணைந்த மாடலிங் மொழியில் உள்ள ஒருவகை இடைவினை வரைபடம் ஆகும். இது செயல்கள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்பதையும் எந்த வரிசையில் இயங்குகிறது என்பதையும் காண்பிக்கிறது. செய்தி தொடர்வரிசை விளக்கப்படத்தின் ஒரு சுருக்க வடிவமே இதுவாகும். தொடர்நிகழ்வு வரைபடங்கள் சிலநேரங்களில் நிகழ்வு பின் தொடருதல் வரைபடங்கள், நிகழ்வு காட்சி, மற்றும் நேர வரைபடங்கள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

                                               

ஊடகம்

தகவல்தொடர்பில், ஊடகம் என்பது தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும், மாறாக ஒருமையில் இது ஊடகம் என குறிப்பிடப்படுகிறது.

                                               

திறனாய்வு

திறனாய்வு என்பது ஒரு உயிருள்ள,உயிரற்ற பொருளின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து உண்மைத் தன்மையையும் அதில் கூறப்பட்ட நேர்,எதிர் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.

                                               

ஓவியக் காட்சியகம்

ஓவியங்களைச் சிறப்பாக காட்சிசெய்யும் இடம் ஓவியக் காட்சியகம் ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவது உண்டு. ஓவியரின் படைப்புக்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல ஓவியக் காட்சியகங்கள் உதவுகின்றன.

                                               

பறவைப் பார்வை

பறவைப் பார்வை என்பது யாதாயினும் ஒரு பொருளை அதன் மேலிருந்து பார்க்கும் போது கிடைக்கும் தோற்றமாகும். அதாவது ஒரு பறவையின் கண் பார்வைக்குக் கிடைக்கும் தோற்றமாகும். பொதுவாக நீலப்பதிப்புகள், தள வரைபடங்கள் மற்றும் வரைபடங்கள் இத்தகைய தோற்றத்திலேயே வரையப்படுகின்றன. வான் புகைப்படங்கள் மற்றும் உயரமான மலை மற்றும் கோபுரங்களில் இருந்து எடுக்கும் புகைப்படங்கள் இத்தகையன.

                                               

பிங் மேப்ஸ்

பிங் மேப்ஸ் என்பது ஓர் இணைய தேசப்பட வழங்கியாகும். இது கூகிள் தேசப்படம், கூகிள் பூமி, யாகூ தேசப்படம் மற்றும் மேப் க்யுயெஸ்ட் போன்று தேசபடங்களை வழங்கும் ஓர் இணைய சேவையாகும். இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ்வின் ஓர் அங்கமாகும்.2005 ஆம் ஆண்டு டிசெம்பரில் ஆரம்பிக்கப் பட்ட வின்டோஸ் லைவ் லோக்கல் இச் சேவையானது MSN மெய்நிகர் பூமி வசதிகளைக் கொண்டுள்ளது.

                                               

உரனோமெட்ரியா

உரனோமெட்ரியா என்பது ஜோகன் பேயர் என்பவரால் வெளியிடப்பட்ட விண்மீன் வரைபடத்தின் சுருக்கப்பெயர் ஆகும். 1603ல் செருமனியின் ஆக்ஸ்பர்கில் கிரிஷ்டோபோரஸ் மான்கஸ் மூலம் அச்சிடப்பட்ட அந்த விண்மீன் வரைபடத்தின் முழுப் பெயர்: Uranometria: omnium asterismorum continens schemata, nova methodo delineata, aereis laminis expressa என்பதாகும். இதன் பொருள் உரனோமெட்ரியா:புதிய முறையில் வரைந்து செப்பு தகடினால் எழுதப்பட்ட அனைத்து விண்மீன் குழாங்களின் படம் என்பதாகும்.

                                               

காரணம் காரிய வரைபடம்

காரணக் காரிய வரைபடம்: காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை. ஒரு சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். ஆகவே, அந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டுமானால், அதன் காரணங்களை ஆராய்ந்து அவற்றை எல்லாம் படிப்படியாக நீக்க வேண்டும். காரணங்களை எல்லாம் பட்டியலிட்டு ஆராய்வதைக் காட்டிலும் ஒரு படமாக வரைந்து ஆராயும்போது அது எளிதாகவும் தீர்மானிப்பது விரைவாகவும் இருக்கும். ஒரு சிக்கலுக்கு என்னவெல்லாம் காரணங்களாக அமைகின்றன என்பதை வகைப்படுத்திக் காட்டும் படம்தான் காரணக் காரிய வரைபடம். சிக்கலுக்கான காரணங்களை முதன்மைக் காரணங்கள் என்றும் துணைக்காரணங்கள் என்றும் பிரித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு ப ...

                                               

செயல்வழிப் படம்

செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன.

                                               

செயற்பாட்டு வரைபடம்

செயற்பாட்டு வரைபடம் என்பது ஒரு பணிப்போக்கின் செயற்பாடுகளையும் செயல்களையும் காட்சிவடிவத்தில் விளக்கி ஆவணப்படுத்த உதவும் ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக மென்பொருட்களின் செயற்பாடுகளை விபரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒருங்கு மாதிரியாக்க மொழியின் செயல் விளக்க வரைபட சீர்தரங்களில் ஒன்று. இது செயல்வழிப் படத்தை ஒத்தது. ஆனால் செயல்வழிப்படம் போல் அல்லாமல் concurrency செயற்பாடுகளை செயற்பாட்டு வரைபடம் கொண்டு விளக்கலாம்.

                                               

தரவு போக்கு வரைபடம்

தரவு போக்கு வரைபடம் ஒரு தகவல் அமைப்பு வாயிலாக தரவின் "போக்கின்" வரைபட விளக்கம் ஆகும். DFDகளை தரவுச் செயலாக்கத்தின் காட்சிப்படுத்தலுக்காகவும் பயன்படுத்த முடியும். ஒரு தரவு போக்கு வரைபடத்தில், தரவு உருப்படிகள் ஒரு புறத் தரவு மூலம் அல்லது அகத் தரவு சேமிப்பிலிருந்து ஒரு அகத் தரவு சேமிப்பு அல்லது புறத் தரவு சேரிடத்து க்கு அகச் செயலாக்கம் வாயிலாகச் செல்கின்றன. ஒரு தரவு போக்கு வரைபடம் ஆனது கால அளவைப் பற்றி அல்லது செயலாக்கங்களின் வரிசை அல்லது செயலாக்கங்கள் தொடர்ச்சியான முறையில் அல்லது இணையான முறையில் செயல்படுகிறதா என்பதைப் பற்றி எந்தத் தகவலையும் வழங்குவதில்லை. எனவே இது ஒழுக்கு வரைபடத்தில் இருந்து ...

                                               

நீல அச்சுப்படி

நீல அச்சுப்படி என்பது, தொழில்நுட்ப வரைபடங்களைப் படியெடுக்கும் ஒரு குறிப்பிட்ட முறை மூலம் பெறப்படும் அச்சுப்படிகளைக் குறிக்கும். அண்மைக்காலத்தில் பெரிய அளவு தாள்களில் ஒளிப்படப்படிகள் எடுப்பதற்கான பொறிகள் பயன்பாட்டுக்கு வரும்வரை கட்டிடக்கலை, பல்வேறு பொறியியல் துறைகள் போன்றவை சார்ந்த வடிவமைப்பு வரைபடங்களைப் படியெடுப்பதற்கு நீல அச்சுப்படி முறையே பயன்பாட்டில் இருந்து வந்தது. தொடக்க காலத்தில் இத்தகைய அச்சுப்படிகள் கடும் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறக் கோடுகளையும் எழுத்துக்களையும் கொண்டதாக இருந்தன. இதனாலேயே இவற்றை நீல அச்சுப்படிகள் என அழைத்தனர்.

                                               

படி வரைபடம்

ஒரு வட்டத் தொகுதியின் படி வரைபடம் என்பது பல்கோண வடிவச் சிறுசிறுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட யூக்ளிடிய தள வரைபடம். இச்சிறு பகுதிகள், வட்டத் தொகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு சிறு பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்கொள்ளப்பட்ட வட்டத் தொகுதியைச் சேர்ந்த ஒரு வட்டம் C -க்குரிய பகுதியிலுள்ள எந்தவொரு புள்ளிக்கும் அவ்வட்டத்தைப் பொறுத்த படியானது அதே தொகுதியிலுள்ள பிற வட்டங்களைப் பொறுத்த படிகளின் மதிப்பை விடச் சிறியதாக இருக்கும்.

                                               

பிரி ரெயிஸ் வரைபடம்

பிரி ரெயிஸ் வரைபடம் என்பது 1513 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசரின் கடற்படையில் அதிகாரியாக இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் வரையப்பட்ட ஒரு உலக வரைபடம் ஆகும். இந்த வரைபடத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இப்போது உள்ளது, மீதமுள்ள இரண்டு பங்கு அழிந்து விட்டது. இந்த வரைபடத்தில் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் கடற்கரை போன்ற மேற்குக் கடற்கரைப் பகுதிகள் ஓரளவு துல்லியத்துடன் வரையப்பட்டிருந்தன. அசோரசு, கேனரி தீவுகள் போன்ற பல்வேறு அத்திலாந்திக் தீவுகள், தொன்மைத் தீவான அந்தீலியா, மற்றும் சப்பான் ஆகியவையும் வரையப்பட்டிருந்தன.

                                               

மன வரைபடம்

மன வரைபடம் மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒரு எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த எளிய முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்ந்து தோன்றும் கருத்துக்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும். கருத்துக்களை ஆக்க, பாக்க, பகுக்க, கட்டமைக்க பயன்படும் இந்த வழிமுறை, படித்தல், ஒழுங்குபடுத்தல், சிக்கல் தீர்த்தல், முடிவு செய்தல் ஆகிய செயல்களில் உதவுகிறது.

                                               

வகுப்பு வரைபடம்

மென்பொருள் பொறியியலில், கிளாஸ் வரைபடம் என்பது ஒருங்கிணைந்த மாடலிங் மொழியில் ஒரு முறைமையின் அமைப்பை நிலையான வடிவ படங்கள் மூலம் விளக்குவதாகும். அதில் அந்த முறைமையின் கிளாஸ்கள், அவற்றின் பண்புகூறுகள் மற்றும் கிளாஸ்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவை காண்பிக்கப்படும்.

                                               

வரிசைப் பட்டியல்

வரிசைப் பட்டியல் என்பது தரவுகளை ஒழுங்கமைத்து காட்சிப்படுத்த உதவும் ஒரு தகவல் வெளிப்படுத்தல் முறையாகும். வரிசைப் பட்டியல்கள் தொடர்பாடல், ஆய்வு, தரவு பகுப்பாய்வு துறைகளில் பரந்த பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு வரிசைப் பட்டியல் வரிசைகளையும், நிரல்களையும் கொண்டிருக்கிறது.

                                               

வோனோபோ

வோனோபோ என்பது கூகிள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ எனப்படும் வீதிப்பார்வை வரைப்படம் போன்று ஜெனிசியஸ் இன்டர்னேசனல் நிறுவனம் இந்தியாவிற்கு வழங்கியுள்ள வீதிப்பார்வை வரைப்படம் ஆகும். இந்த வரைபடத்தை மும்பை நகரத்திலுள்ள ஜெனிசியஸ் நிறுவனம், wonobo.com என்ற இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →