Back

ⓘ நாடுகள்                                               

நாடு

அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் மற்றும் அரசு என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

                                               

ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் ...

                                               

இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்

இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது நேச நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.

                                               

மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்

மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும். முன்னர் இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் நேரடி ஆட்சியின் கீழ் ஐநாவின் கண்காணிப்பில் இருந்தன. 1979இல் இவை தமது அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து பின்னர் 1986இல் விடுதலை பெற்றன. தற்போது இந்நாடு மிகப்பெருமளவில் வேலையில்லாப் பிரச்சினை, அளவுக்கதிகமான மீன்பிடித்தல், அமெரிக்காவின் அதிக நிதி உதவி போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது. மைக்ரோனீசியக் கூட்டு ...

                                               

அச்சு நாடுகள்

அச்சு அணி நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.

                                               

ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்

தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையில் 193 மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன. இவற்றின் பட்டியலுக்கு ஐநா பொதுச்சபையைப் பார்க்கவும்.

                                               

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும். இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2013 செப்டம்பர் முதல் 2014 ஆம் ஆண்டுவரை இதன் தலைவராக இருந்த ஜான் ஆஷ் என்பவர் சீன தொழில் அதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

                                               

வளர்ந்துவரும் நாடுகள்

வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள் புதிதான ஒரு சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்க ...

                                               

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது.

                                               

ஏற்கப்படாத நாடுகள்

இந்த ஏற்கப்படாத நாடுகள் பட்டியலில் உலகளவில் முழுமையான அரசியல் ஏற்பு இல்லாத, தங்கள் அரசாண்மை நிலையை வழமையான பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் பன்னாட்டு அரசுகளின் ஏற்பினை வேண்டும், தற்போதுள்ள நிலப்பகுதிகள் குறிப்பிடப் படுகின்றன. இவை இரண்டு வகைப்படுகின்றன.முதலாவதாக, தங்கள் நிலப்பகுதியின் மீது முழு அல்லது போதிய கட்டுப்பாடு கொண்டிருக்கும் நடப்பில் உண்மை யான, முழு விடுதலை விரும்பும் அரசு அமைப்புகள்.இரண்டாவதாக, தாங்கள் உரிமை கோரும் நிலப்பகுதியின் மீது முழு அல்லது போதிய கட்டுப்பாடு இல்லாத, ஆனால் சட்டப்படி உண்மை யான அரசமைப்பாக, ஓர் ஏற்புடைய அன்னிய நாடாவது ஏற்றுக்கொண்ட அரசு அமைப்புகள்.இந்த பட்டியலில் உள் ...

                                               

நோர்டிக் நாடுகள்

நோர்டிக் நாடுகள் என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட், மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன் தீவும், சுவால்பாத் தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன. பொதுவில் இந்த நோர்டிக் நாடுகள் என்ற பெயர் பலராலும் ஸ்காண்டனேவிய நாடுகள் என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன. இந்நாடுகளில் மொத்தமாக 25 ...

                                               

உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது. மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.

                                               

உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)

கண்டங்கள் வாரியாக உலக நாடுகள் பட்டியல். வட அமெரிக்கா அந்தாட்டிக்கா ஆப்பிரிக்கா ஆசியா ஐரோப்பா ஓசியானியா தென் அமெரிக்கா Transcontinental countries in Europe and Asia, classified as கிழக்கு ஐரோப்பாan countries by the United Nations Statistics Division: உருசியா.

                                               

அரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல்

அதிபரும் பிரதமரும் இணைந்து ஆட்சி செய்யும் முறையே அரை அதிபர் முறையாகும். இம்முறையில் அதிபர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருப்பார். ஆட்சியின் சில குறிப்பிட்ட பகுதிகளை பிரதமர் நிறைவேற்றுவார். பிரான்ஸ் யேமன் லெபனான் மேற்கு சகாரா சாவோ தோமே பிரின்சிபே மோல்டோவா கேப் வேர்டே பாக்கிஸ்தான் ருமேனியா அல்ஜீரியா கயானா பொசுனியாவும் எர்செகோவினாவும் சான் மரீனோ மொங்கோலியா இலங்கை எகிப்து பாலஸ்தீனம் ரஷ்யா அங்கோலா தென்னாபிரிக்கா உக்ரேன்

                                               

எசுப்பானிய அமெரிக்கா

எசுப்பானிய அமெரிக்கா அல்லது இசுப்பானிக் அமெரிக்கா அமெரிக்காக்களில் உள்ள எசுப்பானியம் பேசுகின்ற நாடுகள் அடங்கிய பகுதியாகும். இந்த நாடுகளுக்கும் எசுப்பானியாவிற்கும் அல்லது அதன் முன்னாள் ஐரோப்பிய பெருநகரத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த அனைத்து நாடுகளிலிலுமே எசுப்பானியம் முதன்மை மொழியாக உள்ளது; சிலவற்றில் ஒன்று அல்லது மேற்பட்ட முதற்குடிகளின் மொழிகளுடன், அல்லது ஆங்கிலத்துடன் புவர்ட்டோ ரிகோவில் எசுப்பானியம் அலுவல்மொழியாக இணைத்தகுதி பெற்று விளங்குகின்றது. கத்தோலிக்க கிறித்தவமே பெரும்பான்மையினரின் சமயமாக விளங்குகின்றது. ஐபீரோ-அமெரிக்கா என்ற வகைப்பாட்டில் எசுப்பானிய அமெரிக்க நாடுகளுடன் பிரேசிலு ...

                                               

ஒன்றுடன் ஒன்றாக எல்லையைக் கொண்டுள்ள நான்கு நாடுகளின் பட்டியல்

உலகின் சில பகுதிகளில் நான்கு நாடுகள் ஒன்றுட்ன் மற்றொன்றாக எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக, இத்தகைய சூழலில் மூன்று நாடுகளுக்கு நடுவில் ஒரு நாடு அமைந்திருக்கும், இத்தகைய அமைப்பில் நடுவில் அமைந்துள்ள நாடுகளில் சில புருண்டி. லக்சம்பர்க், மலாவி, பராகுவே.

                                               

சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளின் இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றச்சுழலின் அமைவிடத்தையும் கொண்டு அவை சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா. ஏழுமலைகளின் நகரம் - ரோமாபுரி ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து இருண்ட கண்டம் - ஆபிரிக்கா இந்தியாவின் மேற்கு நுழைவாயில் - மும்பை துறைமுகம்" உலகத்தின் கூரை - பாமிர் உலகத்தின் தடுக்கப்பட்ட இடம் ; - திபெத் உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஜியம் ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஜியம் ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து ...

                                               

தேசிய இனவாரியாக மக்கள் பட்டியல்

                                               

நடுநிலை நாடு

ஒரு குறிப்பிட்ட போரின் போது சண்டையிடும் இரு தரப்புகளுடன் சேராமல் நடுநிலை வகிப்பதாக அறிவிக்கும் நாடு நடுநிலை நாடு என்று வழங்கப்படும். சண்டையில் பங்குபெறா நாடுகளுக்கும் நடுநிலை நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. சண்டையிடுபவர்களுள் ஒரு தரப்பினை ஆதரித்தாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ போரில் ஈடுபடாத நாடு நடுநிலை நாடு கிடையாது. 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தின் ஐந்தாவது மற்றும் பதின்மூன்றாவது பிரிவுகளில் நடுநிலை வகிக்கும் நாடுகளின் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட போர்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நடுநிலை வகிக்க நிர்பந்திக்கப்படும் பன்னாட்டு உடன்படிக்கைளின ...

                                               

பன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள்

இக்கட்டுரையில் பன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. இது முழுமையான பட்டியல் இல்லை. பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →