Back

ⓘ கோள்கள்                                               

கோள்

கோள் விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும் இது. மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். தனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்; கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்ததும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானத ...

                                               

புவிக்கு சமமான கோள்கள்

புவிக்கு சமமான கோள்கள் என்பது சிலிகேட் பாறைகள் மற்றும் உலோகங்களால் ஆன கோள்கள் ஆகும். இவை சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்கள் ஆகும். இந்த பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது, அதாவது இலத்தீன் மொழியில் டெர மற்றும் டெள்லுஸ், என்பது புவியினைக் குறிக்கும். எனவே terrestrial planet என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த கோள்களின் மேற்பரப்பு நீரியம், ஈலியம் போன்ற வாயுக்கள் மற்றும் பனிக்கட்டியால் அமையாமல் ஒரு திடமான பகுதியாக புவியின் புவியோடு போன்று அமைய வேண்டும். கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் படி, 40 பில்லியன், புவிக்கு சமமான அளவுடைய கோள்கள் மற்றும் செங்குறுமீன்கள் பால் வ ...

                                               

இந்திய செயற்கை கோள்கள்

இந்திய செயற்கை கோள்கள் செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே மாதிரி தோற்றமும்,அமைப்பும் கொண்டவை அல்ல.அதேபோன்று அவற்றின் பயன்களும் வெவ்வேறானவை.ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயற்கைகோளை தயாரித்து அனுப்புகின்றன.இந்தியாவும் பல பயன்பாட்டிற்காக செயற்கை கோள்களைதயாரித்து ஆய்வு செய்வதற்கு அனுப்பி வருகின்றன.

                                               

புவியொத்த கோள்

புவியொத்த கோள்கள், அல்லது உட்கோள்கள் என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும். புவியொத்த கோள்கள் வளிமப் பெருங்கோள்களை விட மிக அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

                                               

நவக்கிரகம்

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். கிரகம் எனும் சமசுகிருத சொல் ஆளுகைப்படுத்தல் - எனும் பொருளுடையது. நவக்கிரகம், ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன. நவக்கிரங்களை தமிழில் ஒன்பான் கோள்கள் என்று அழைக்கின்றனர்.

                                               

இருண்ட நெபுலா

PLANET என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது - கிரேக்க PLANET என்பதன் பொருள் - அலைந்து திரிபவன் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் - 8 முதல் நான்கு கோள்கள் - உட்கோள்கள் உட்கோள்கள் வேறு பெயர் - பாறைக் கோள்கள் அடுத்த நான்கு கோள்கள் - வெளிக்கோள்கள் வெளி கோள்கள் வேறு பெயர் - வாயு கோள்கள் கோள்களில் மிக பெரியது - வியாழன் கோள்களின் மிக சிறியது - புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன் சூரியனுக்கு தொலைவில் உள்ள கோள் - நெப்டியூன் மிக வெப்பமான கோள் - வெள்ளி மிக குளிர்ச்சியான கோள் - நெப்ட்யூன் துணை கோள்கள் இல்லாத கோள்கள் - புதன், வெள்ளி தன்னை தானே வேகமாக சுழலும் கோள் - வியாழன் தன்னை தானே மெதுவாக ...

                                               

சூடான வியாழனை போன்ற கோள்கள்

சூடான வியாழனை போன்ற கோள்கள் என்பது புறக்கோள்களை வகைகளில் ஒரு வகை ஆகும். இந்த வகை கோள்களின் பண்புகள் வியாழனை போன்றது.ஆனால் இவைகளின் மேற்பரப்பின் வெப்பநிலை வியாழனை விட மிக அதிகம் ஏனெனில் இவை அதன் விண்மீன்களை மிக அருகில் சுற்றி வருகிறது, அதாவது தோரயமாக 0.015 மற்றும் 0.5 வானியல் அலகு துராத்தில். நமது வியாழன் அதன் விண்மீனான சூரியனை தோரயமாக 5.2 வானியல் அலகு துராத்தில் சுற்றி வருவதால் இதன் வெப்பநிலைக் குறைவாகவே உள்ளது. நம்மால் நன்கறியப்பட்ட சூடான வியாழன் போன்ற கோள் 51 பெகாசி பி.இதன் செல்லப்பெயர் பெல்லெரோபன்.இது 1995ல் கண்டுபிடிக்கப்பட்டது.சூரியனை போன்ற விண்மீன்களை சுற்றி வரும் புறக்கோள்களில் இந்த ...

                                               

சுற்றுப்பாதை

பொதுவாக கூறுதலின் ஒரு மையப்படுத்தப்பட்ட துகளையோ அல்லது அமைப்பையோ சுற்றி பிற துகள்கள் அல்லது பொருள்கள் ஈர்ப்புவிசை காரணமாக சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை என பொருள் படும்.

                                               

ஏரிசு (குறுங்கோள்)

ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஆகும். இது முன்னர் 136199 ஏரிஸ் என அழைக்கப்பட்டது. இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள 9வது பெரிய பொருள் ஆகும். 2.500 கிலோ மீட்டர் விட்டமும் புளூட்டோவை விட 27% அதிக திணிவையும் கொண்டது. ஏரிஸ் முதன் முறையாக 2003 இல் மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆய்வுக்குழு கலிபோர்னியாவின் பலோமார் விண்வெளி ஆய்வு மையத்தில் அவதானித்தது. ஆனாலும் இது 2005 வரையில் இனங்காணப்படவில்லை. ஏரிஸ் டிஸ்னோமியா என்ற ஒரேயொரு சந்திரனைக் கொண்டுள்ளது. மேலதிகமாக எவ்வித செய்மதிகளையும் இது கொண்டிருக்கவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியனிலிருந ...

                                               

வானொலி அதிர்வெண் தொலைநோக்கி

வானொலி அதிர்வெண் தொலைநோக்கி, வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கி ஆகும். வானியல் ஆய்வில் பொதுவாக ஒளியியல் தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும்; மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் தருணங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது. விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள். ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் விண்மீன்கள், கோள்கள், சூரியன் ஆகியவற் ...

                                               

கோள் அறிவியல்

கோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே கோள் அறிவியல் எனப்படும். பொதுவாக இது சூரியக் குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும். இக்கற்கையானது மிகச் சிறிய விண்கற்கள் தொடக்கம் பெரிய வாயுக் கிரகங்கள் வரை இருக்கும். இது அவற்றின் தொகுப்பு, இயக்கவியல், உருவாக்கம் மற்றும் இடைத் தொடர்புகள் பற்றி ஆராயும்.

                                               

கோள்களின் கருவம்

கோள்களின் கருவம் என்பது கோள்களின் மிக உள்ளார்ந்த பகுதிகளை குறிக்கும் பகுதி ஆகும். கோள்களின் கருவம் சில கோள்களில் திரவ நிலைப் பகுதிகளையும், திட நிலைப்பகுதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாய் மற்றும் வெள்ளியின் கருவம் அவற்றின் உட்பகுதியிலேயே உருவாகக்கூடிய காந்தப் புலம் குறைவாக உள்ளதால் முழுமையும் திட நிலையில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் கருவத்தின் அளவு ஒரு கோளின் ஆரத்தின் 25% முதல் 85% வரை ஆக அமைந்துள்ளது. வளிமப் பெருங்கோள்களின் gas giants கருவங்களில் இரும்பு மிகுதியாகக் காணப்படுகிறது. வளிமப் பெருங்கோள்களின் மொத்த நிறையுடன் ஒப்பிடுகையில் இவற்றின் ...

                                               

பிஎஸ்ஓ ஜே318.5-22

பிஎஸ்ஓ ஜே318.5-22 என்பது ஒரு உறுதி செய்யப்பட்ட புறக்கோள் ஆகும்.இது எந்த விண்மீனையும் சுற்றி வரவில்லை.இந்தக் கோள் புவியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது பீட்டா பிக்டோரிச் நகரும் குழுப் பகுதியில் அமைந்துள்ளது, இது 2013ல் பான்-எச்டிஎஆர்ஆர் PS1 தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தக் கோள் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பீட்டா பிக்டோரிச் நகரும் குழுவும் இதே வயது உடையது ஆகும். ஹவாய் பல்கலைக்கழக வானியல் பிரிவு தலைவர் டாக்டர்.மைக்கேல் லியூ கூறுகையில்,விண்வெளியில் இது போன்று விண்மீன்களின்றித் தனித்த கோள் எதையும் இதுவரை நாங்கள் ...

                                               

புதன் (கோள்)

புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயிரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை angular separation from the sun குறைவாக அதிகபட்சமாகவே 28.3 o தான் உள்ளதால், பெரும ...

                                               

மர்மக் கிரகம்

நிபிரு என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இருப்பினும் இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரு கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 இல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்பட்டது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர். மர்மக் கிரகம் எனவும் அழைக்கப்படும் இது சூர்யக் குடும்பத்தில் உள்ள தேடப்படும் கிரகமாகும். இது நெப்டியூன் கிரகத்தைத் தாண்டி இருக்கிறது.

                                               

வியாழன் (கோள்)

வியாழன் என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும்; மற்ற இரு பெருங்கோள்களான யுரேனசு மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டும் பனிப் பெருங்கோள்கள் ஆகும். பழங்காலத்திலேயே வியாழன் கோளைப் பற்றி வானியலாளர்கள் அறிந்து வைத்திருந்தனர். கதிரவ ஒளியை எதிரொளிக்கும் திறமை காரணமாக நிலவு மற்றும் வெள்ளியை அடுத்து வியாழனே இரவு வானில் ...

                                               

கோள்கள் தன்னை தானே சுற்ற ஆகும் காலமும் சூரியனை சுற்ற எடுத்து கொள்ளும் காலமும்

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் தன்னை தானே சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமும், அவை சூரியனை சுற்ற எடுத்து கொள்ளும் காலமும் கீழ்வறுமாறு அமைகின்றன: - குறியிட்ட வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகின்றன. ஆனால் மற்ற அனைத்துக் கோள்களும் தற்சுழற்சியில் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகின்றன.

                                               

(4538) விசுயானந்த்

விசுயானந்த் என்பது சிறுகோள் படையில் உள்ள ஒரு சிறு கோள் ஆகும். இது அக்டோபர் 10, 1988 அன்று, கென்சோ சுசுகி என்ற ஜப்பான் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியக் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் உலக சதுரங்க விளையாட்டில் முதன்மையானவரான விசுவநாதன் ஆனந்த் பெயர் இதற்கு சூட்டப்பட்டு உள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →