Back

ⓘ மகிழ்கலை



                                               

மகிழ்கலை

மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான Entertainment இணையாக பயன்படுகின்றது. கதைகூறல், நடனம், இசை, தொழிற்கலைகள், கல்விசார் கலைகள், தற்காப்பு அல்லது போர்க் கலைகள், மனவளக்கலைகள் போன்றவற்றுடன் மகிழ்கலைகளை ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மகிழ்கலைகள் நிகழ்ச்சியாகவோ, அரங்காடல் கலைகளாகவோ, கணினிக் கலைகளாகவோ மற்றும் பல கலை வடிவங்களாக அமையலாம்.

                                               

மார்வெல் மகிழ்கலை

மார்வெல் மகிழ்கலை ஓர் அமெரிக்க நாட்டு மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. இந்த நிறுவனம் முற்றிலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. ஸ்பைடர் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வால்வரின், எக்ஸ்-மென் போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது.

                                               

வால்ட் டிஸ்னி நிறுவனம்

வால்ட் டிஸ்னி கம்பனி உலகின் இரண்டாவது பெரிய, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது. டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ் ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட் ...

                                               

பிளே போய் தொழிலகம்

பிளே போய் தொழிலகம் ஒர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1953 ஆம் ஆண்டில் பெண்களை ஆபாசமாக, நிர்வாணமாக, கவர்ச்சியாக காட்டும் பிளே போய் இதழை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வ்ளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் பிளே போய் இதழினிதும் நிறுவனத்தினதும் தாக்கம் கணிசமானது.

                                               

ரோமன் ரெயின்சு

லயதி ஜோசப் "ஜோ" அனாய் என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவர் புகழ்பெற்ற உலக தொழில்முறை குத்துச் சண்டை குடும்பமான அனோவா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் ஆவார்.டுவெயின் ஜான்சன், ரிக்கிசி மற்றும் தெ ஊ சோஸ் ஆகியோர் இந்தக் குடும்பத்தினர் ஆவர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் ரோமன் ரெயின்சு எனும் பெயரில்விளையாடி வருகிறார்.

                                               

செத் ராலின்சு

கால்பி டேனியல் லோபசு என்பவர் ஓர் அமெரிக்க மற்போர் வல்லுனர் மற்றும் நடிகர் ஆவார். தற்பொழுது டபிள்யு டபிள்யு ஈ-ல் ஒப்பந்தமாகி, அங்கே செத் ராலின்சு என்ற புனைப் பெயரில், ரா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 2010 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் உடன் கையெழுத்திட்ட பிறகு, லோபஸ் அதன் அங்கத்துவ நிறுவனமான புளோரிடா சாம்பியன்ஷிப் மல்யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் சேத் ரோலின்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டு தொடக்க எப் டிடபிள்யூ கிராண்ட்ஸ்லாம் வாகையாளர் ஆனார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான என் எக்ஸ் டியில் கலந்து கொண்டு என் எக்ஸ் டி வாகையாளர் பட்டம் பெற்றார். சக மல்யுத்த வ ...

                                               

கெவின் ஓவன்சு

கெவின் யானிக் சிடீன் என்பவர் ஓர் கனேடிய மல்யுத்த வீரர். அவர் டபிள்யு டபிள்யு ஈ உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சிமாக்டவுன் என்ற நிகழ்ச்சியில் கெவின் ஓவன்சு என்ற புனை பெயரில் பங்கேற்கிறார். மேலும் இவர் நடப்பு அமெரிக்க வாகையர், இது இவரது இரண்டாம் முறை. ஓவன்சு இதற்கு முன்னதாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் - வளரும் நிறுவனமான என் எக்சு டீ-யில் ஒரு தடவை என் எக்சு டீ வாகையராக, பிரதான நிறுவனத்திற்கு மே 2015 அறிமுகமாவதற்கு முன் இருந்தார். இவர் இண்டர்காண்டினண்டல் மற்றும் அமெரிக்க சாம்பியனாக இரு முறையும், உலக சாம்பியனாக ஒரு முறையும் அதிகப்படியான நாட்கள் சாம்பியனாக இருந்தவர், 189 நாட்கள் இவர் சர ...

                                               

மெரிசே ஓவலெட்

மெரிசே ஓவலெட் மிசானின் ஒரு கனடிய-அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தொழில்முறை மல்யுத்த மேலாளர், நடிகை, தொழிலதிபர், மற்றும் மாதிரி அழகி தற்போது டபிள்யுடபிள்யுஇ உடன் ஒப்பந்தம் செய்து மேரிஸ் எனும் மேடைப் பெயரில், ஸ்மாக்டவுன் பிரிசில் தனது நிஜ வாழ்க்கை கணவர் தி மிஸ்ஸின் மேலாளராக இருந்தார். 2003 ஆம் ஆண்டில் மிஸ் ஹவாய் டிராபிக் கனடாவை வென்றது உட்பட பல ஆண்டுகளாக மாடலிங் செய்தபின், ஓவெலட் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் திவா தேடல் போட்டியில் பங்கேற்ற பிறகு, ஆகஸ்ட் 2006 இல் தொழில்முறை மல்யுத்த விளம்பர உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் ஸ்மாக்டவுன் பிரிவிற்கு நிய ...

                                               

கோடி ரோட்ஸ்

கோடி காரெட் ரன்னல்ஸ் ரோட்ஸ் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், விளம்பரதாரர், தொழிலதிபர் மற்றும் நடிகர் ஆவார், இவர் கோடி ரோட்ஸ் அல்லது வெறுமனே கோடி என்ற மேடைப் பெயரால் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் பங்கேற்றதன் மூலம் பரவலாக அரியபப்டுகிறார். இவர் ஆல் எலைட் மல்யுத்தத்தின் நிர்வாக துணைத் தலைவராக உள்ளார். ரோட்ஸ் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் ஹால் ஆஃப் ஃபேமர் டஸ்டி ரோட்ஸ் மற்றும் முன்னாள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மல்யுத்த வீரர் கோல்டஸ்டின் சகோதரர் ஆவார். ஒரு அமெச்சூர் மல்யுத்த வாழ்க்கைக்குப் பிறகு, இவர் இரண்டு முறை ஜார்ஜியா மாநில சாம்பியனானார், இவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரரின ...

                                               

பெத் ஃபீனிக்ஸ்

எலிசபெத் கோப்லாண்ட் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆவார், அவரது மேடைப் பெயர் பெத் பீனிக்ஸ் மூலம் பரவலாக அரியப்பட்டார் இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் கையெழுத்திட்டார் மற்றும் என் எக்ஸ் டி நிறுவனத்தில் வர்ணனையாளராக செயல்படுகிறார். ஒரு மல்யுத்த வீரராக, இவர் முன்னாள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் டிவாஸ் வாகையாளர், மூன்று முறை உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மகளிர் வாகையாளராகவும், மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட இளைய நபர் ஆவார். ஃபீனிக்ஸ் பள்ளிப்பருவ காலங்களில் நடைபெற்ற அமெச்சூர் மல்யுத்தப்போட்டிகளில்பல வெற்றிகளைப் ...

                                               

டிரிஷ் சிரேடியஸ்

பாட்ரிசியா அன்னே சிரேடியஸ் ; என்பவர் கனடாவைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர், உடற்பயிற்சி வடிவழகி மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார்.மல்யுத்த மேடைப் பெயரான டிரிஷ் சிரேடியஸ் என்பதன் மூலம் பரவலாக அரியப்பட்டார் உடற்பயிற்சி வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், ஸ்ட்ராட்டீஜஸ் உலக மல்யுத்த கூட்டமைப்பில் பணியாற்றத் தொடங்கினார், பின்னர் இது உலக மகிழ்கலை நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. இவர் ஒரு முறை ஹார்ட்கோர் வாகையாளராகவும், மூன்று முறை உலக மகிழ்கலை நிறுவனத்தின் ஆண்டின் சிறந்த பெண் மல்யுத்த வீராங்கனையாகவும் அறிவிக்கப்பட்டார். ஏறக்குறைய ஏழு ஆண் ...

                                               

சீமஸ்

ஸ்டீபன் ஃபாரெல்லி ஒரு ஐரிஷ் தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் நடிகர் ஆவார். தற்போது அமெரிக்காவின் தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு நிறுவனமான உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த நிறுவனத்தின் சுமாக்டவுன் நிகழ்ச்சியில் சீமஸ் எனும் மேடைப்பயரில் விளையாடி வருகிறார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, ஃபாரெல்லி ஐரோப்பிய மல்யுத்தப் போட்டிகளில் இவர் மல்யுத்தம் செய்தார்.மேலும் ஐரிஷ் விப் மல்யுத்தத்தில் IWW இவர் விளையாடினார். அந்தக் காலத்தில் இவர் இரண்டு முறை சர்வதேச மிகுகன வாகையாளராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் பிரதான ...

                                               

அரங்கு

அரங்கு என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்து வைப்பதற்கான ஓர் இடமாக அரங்கத்தைக் கொள்ளலாம். அரங்கு எனப்படுவது கலைக்குழுவால் நிகழ்த்துக்கலைகளை காட்சிப்படுத்துவதற்கான தளம். இத்தளம் ரசிப்பவர்களின் உள்ளத்திடை பொதுவாக இரு கூறுகளைக் கொண்டுள்ளது. முதலாவது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே தங்கள் முன் நிகழும் காட்சியாகவும், இரண்டாவது கலைஞர்கள் எடுத்தாளும் கதை, வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சியைக் காட்டும் கற்பனைத்தளமாகவும் திகழ்கிறது. அரங்கேற்றக் கலைகளைகளின் காட்சிகள் பார்வையாளர்களுடன் நேர்காணல்கள், சைகைகள், உர ...

                                               

திரைப்படம்

திரைப்படம் அல்லது நகரும் படம் என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, இயக்கமூட்டல் தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, சிஜிஐ மற்றும் கணினி இயக்கமூட்டல் மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆ ...

                                               

பாடுதல்

பாடுதல் என்பது குரல் மூலம் இசை ஓசையை எழுப்புவதாகும்.பாடுதல் என்பது பேச்சின் கூட ஒலியிழைவு மற்றும் தாளம் கொண்டு வருவதாகும். பாடும் ஒருவர் பாடகர் அல்லது வாய்ப்பாடகர் என்று அழைக்கப்படுகிறார். பாடகர்கள் சங்கீதத்தை இசைக்கருவிகளுடனோ அல்லது இசைக்கருவிகள் இல்லாமலோ பாட முடியும். பாடலை தனியாகவோ அல்லது குழுவுடனோ அல்லது இசைக்குழுவுடனோ சேர்ந்து பாடலாம். ஒரு வழக்கமான அடிப்படையில் பயிற்சி செய்வதன் மூலம் ஒலிகள் இன்னும் தெளிவாகவும் மற்றும் வலுவாகவும் இருக்கும் என்று அறியப்படுகிறது. நிபுணத்துவம் கொண்ட பாடகர்கள் பொதுவாக பாரம்பரிய அல்லது ராக் இசை போன்ற ஒரு குறிப்பிட்ட இசை வகைகளை சுற்றி தங்கள் பணியை உருவாக்குக ...

                                               

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →