Back

ⓘ இயற்கை                                               

இயற்கை

இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் ...

                                               

இயற்கை எரிவளி

இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள். இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான எத்தேன், புரொப்பேன், பியூட்டேன், பென்ட்டேன் ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும். இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆகும். பெரும்பாலும் இது இல் ...

                                               

இயற்கை வளம்

இயற்கை வளங்கள், அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படுகின்றன. இயற்கை வளங்களின் பண்புகள் அவைகளை சுற்றியுள்ள மாறுபட்ட சிற்றுயிர் முதல் மனிதன் வரை உயிரினங்கள் உள்ள உலகம் மற்றும் அவைகளின் ...

                                               

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை முறையாகும். இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது.

                                               

இயற்கை மீள்மம்

என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும். அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும். இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ...

                                               

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை அல்லது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் என்பது இலங்கையின் இயற்கை மரபுரிமை பற்றிய விடயங்களைக கொண்டுள்ள நூதனசாலை ஆகும். இது கொழும்பு தேசிய நூதனசாலைக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இந்நூதனசாலை செப்டம்பர் 23, 1986 அன்று உருவாக்கப்பட்டது. இது ஒன்றே இயற்கை வரலாறு, இயற்கை மரபுரிமை ஆகியவற்றை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஒரே நூதனசாலை ஆகவுள்ளது. தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலை அரிதான, ஆபத்துக்குட்பட்ட இலங்கைக்குரிய இயற்கை மரபுரிமை தாவரங்கள், விலங்கின அகணிய உயிரி போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது. 5.000 இற்கு மேற்பட்ட பாலூட்டிகளின் மாதிரிகள், சுராசிக் கால ...

                                               

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் என்பது ஒரு இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இது ஃபார்ச்சூன் குளோபல் 500 நிறுவனத் தரவரிசையில் 152ஆவது இடம் வகிக்கிறது, மேலும் இது இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77%மும், இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81%மும் பங்களிக்கிறது. இது இந்தியாவில் அதிகமாக இலாபம் ஈட்டும் நிறுவனம் ஆகும். இது ஆகஸ்ட் 14, 1956 இல் ஒரு ஆணையமாக அமைக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் இந்த நிறுவனத்தின் 74.14% சமபங்கு பங்கினை வைத்திருக்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும். ONGC, எண்ணெயின் ஆய்வுகள் மற்று ...

                                               

இயற்கை அறிவியல்

இயற்கை அறிவியல் என்பது இயற்கை உலகத்தை நடாத்துகின்ற பல்வேறு விதிகளை அறிவியல்சார்ந்த முறைமைகளால் விளக்க முற்படுகின்ற அறிவியலின் கிளை ஆகும். "இயற்கை அறிவியல்" என்ற சொல்லாட்சி மனித நடத்தைகளையும் சமூக அமைப்புக்களையும் அறிவியல் அறிவு வழி கொண்டு ஆய்கின்ற சமூக அறிவியலில் இருந்தும் மனித நிலைகளை பகுத்தாய்வு நோக்குடன் ஆய்கின்ற மனிதவள அறிவியலில் இருந்தும் வழமையான அறிவியலான கணிதம், ஏரணம் போன்றவற்றில் இருந்தும் வேறுபடுத்துமாறு பயன்படுத்தப்படுகிறது.

                                               

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது. இச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே முதலாவதும், பெரியதுமான உலகளாவிய சூழலியல் வலை அமை ...

                                               

இயற்கை உரம்

வேளாண்மையில், இயற்கை உரம் என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும். இவை கரிம /சேதனப் பொருட்களாலானதாக இருப்பதனால் கரிம /சேதன உரம் அல்லது சேதனப் பசளை எனவும் அழைக்கப்படும். மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுப் பொருட்கள், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு, கழிக்கப்பட்ட வைக்கோல், மற்றும் இலை, தழைகள், மண்ணிற்கு இயற்கையாக உரமாகக் கூடிய தாவரங்கள் போன்றவை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்களாகும். இயற்கை உரம் இடுவதால் செடிகளுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் மண்னின் தன்மையும் மாறாது பாதுகாக்கப்படும். விலங்குத் தொழுவங்களில் இருந்து ...

                                               

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று. அப்பிற எரிபொருட்களைப் போன்றே அமுக்கப்பட்ட இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலமும் பசுங்குடில் வளிமங்கள் வெளியாகும் என்றாலும், ஒப்பீட்டளவில் அவை குறைவானவையே என்பதால் சூழல் மாசடைவதைக் குறைக்க உதவும் ஒன்றாகும். அதோடு, இவ்வளி காற்றை விட லேசானது என்பதால், கட்டுப்பாட்டை மீறி வெளியேறினால் விரைவாகக் கலைந்து விடும். பிற நீர்ம எரிபொருட்கள் அவ்வாறன்றி ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. மறுசுழற்சிப் பொருட்களின் வழியே உருவாக்கப்படும் உயிரிவளி போன்றவற்றோ ...

                                               

இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இயல்புகளைக் கவனிக்கும் அறிவியல் ஆய்வினைக் குறிக்கும். இவை எந்தவொரு சோதனையும் நிகழ்த்தாமல் அவற்றின் இயற்கைப்போக்கில் பொறுமையாக பலகாலம் கவனிப்புப் பணிகளில் ஈடுபட்டு தொகுத்த அறிவியல் கூறாகும். கல்விசார்ந்த இதழ்களை விட அறிவியல் இதழ்களைக் கொண்டே இந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இயற்கை அறிவியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள இயற்கை வரலாறு ஆய்வு இயற்கை பொருள் மற்றும் உயினங்களின் இயல்பு குறித்த கல்வியாகும். இயற்கை வரலாற்றைக் கற்ற ஒருவர் இயற்கையாளர் அல்லது "இயற்கை வரலாற்றாளர்" என்று அறியப்படுகிறார்.

                                               

ஆலங்கட்டி மழை

ஆலங்கட்டி மழை வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். இவை 5 மற்றும் 200 மில்லி மீட்டர்கள் விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் 5 மிமீ க்கும் மேலுள்ளவை GR என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் GS என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப் ...

                                               

இயல் மெய்யியல்

இயல் மெய்யியல் அல்லது இயற்கையின் மெய்யியல் என்பது இயற்கை மற்றும் அண்டத்தைக் குறித்த மெய்யியல் ஆய்வாகும். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தின் மேம்பாடுகளுக்கு முன்னர் இத்துறையே முதன்மையாக இருந்தது. இயற்பியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளுக்கு இதுவே முன்னோடியாக இருந்தது. இயற்கை அறிவியல் வரலாற்றின்படி மெய்யியிலிருந்தே, குறிப்பாக இயல் மெய்யியலிலிருந்தே உருவானது. பல தொன்மையான பல்கலைக்கழகங்களில் நெடுங்காலமாக நிறுவபட்டிருந்த இயல் மெய்யியல் தலைமைப் பீடங்கள் தற்காலத்தில் இயற்பியல் பேராசிரியர்களால் நிரப்பப்பட்டுள்ளன. தற்காலப் பயன்பாடான அறிவியலும் அறிவியலாளர்களும் 19வது நூற்றாண்டிலிருந்தே புழக்கத்திற்கு வ ...

                                               

இயற்கை நிழற்படக்கலை

இயற்கை நிழற்படக்கலை என்பது பொதுவாக இயற்கைக் கூறுகளான தரை தோற்றம், வனஜீவராசிகள், தாவரங்கள் போன்றவைகளை எடுத்துக் காட்டும் முகமாக வெளி களங்களில் பிடிக்கப்படுபவையாகும். இவ்வாறான நிழற் படங்கள் மற்றைய நிழற் படங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு வலுவான அழகியல் முக்கியத்துவத்தினை பிரத்தியேகமாக வழங்குகிறது. தோட்டங்களின் நிழற் படங்கள், தரைதோற்ற நிழற் படங்கள், வன வாழ்க்கை நிழற் படங்கள் என்பனவும் சில சந்தர்பங்களில் இயற்கை நிழற் படத்துறைகளில் மேலெழுகிறது. இயற்கை நிழற் படங்களானது விஞ்ஞான,சுற்றுலா மற்றும் கலாசார சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படும். உதாரணமாக தேசிய புவியியல் சஞ்சிகை, தேசிய வனவாழ்க்கை சஞ்சிகை மற்றும் விஷ ...

                                               

எதிர்ச்சூறாவளி

சுற்றுப்புறத்தைக் காட்டிலும் அதிகமான அழுத்தமுள்ள ஓர் இடத்தில் ஏற்படும் வாயு மண்டலச்சுழல் 30 அட்ச ரேகையில் இரு அர்த்த கோளங்களிலும் சமுத்திரங்களில் நிரந்தரமாக உள்ள எதிர்ச்சூறாவளிகள் பெயர் பெற்றவை. இவை பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான மைல்கள் அளவில் உள்ளன. எல்லா அட்சரேகைகளுக்கும் கால நிலையைக் கண்டறிய, இவற்றின் நிலையும் பலமும் மிகவும் முக்கியமான அம்சங்கள், சூறாவளியைப் போலன்றி, வடக்கு அர்த்த கோளத்தில் வலஞ்சுழியாகவும், தென் அர்த்த கோளத்தில் இடஞ்சுழியாகவும் இவை சுழல்கின்றன. பலத்த காற்றும் கெட்ட காலநிலையும் சூறாவளியின் அறிகுறிகள். ஆனால், இவற்றிற்கு எதிராக எதிர்ச்சூறாவளியின் அறிகுறிகள் இனிய காலநிலைய ...

                                               

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் அல்லது உயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம். ஒவ்வொரு தனி உ ...

                                               

திரள் மேகம்

குவி மேகம் அல்லது திரள் மேகம் என்பது பூமியின் மேல் பகுதியிலிருந்து 400 கிலோ மீற்றர்கள் முதல் 1000 கிலோ மீற்றர்கள் உயரத்தில் குவியல் குவியலாக காணப்படும் மேகக்கூட்டம் ஆகும். லத்தீன் மொழி வார்த்தையான குமுலோஸ் என்பதற்கு குவியல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இம்மேகத்தின் அருகில் விமானங்கள் செல்லும்போது வேகமாக மேல்நோக்கி உந்தப்படுகிறது, பின்னர் கீழ்நோக்கி தள்ளப்பட்டு விமானத்தை நிலைகுலையச் செய்கிறது.

                                               

துருவ ஒளி

துருவ ஒளி அல்லது ஆரோரா என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் இலகுவில் காணக்கூடியதாக இருக்கின்றது. வட துருவத்தில் தோன்றும்போது இது வடதுருவ ஒளி எனவும், தென் துருவத்தில் தோன்றும்போது இது தென் துருவ ஒளி எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஒளித்தோற்றத்துக்குரிய அறிவியற் பெயர்கள் Aurora Borealis, Aurora Australis என்பவையாகும். இது ஒரு வானுலகத் தோற்றப்பா ...

                                               

மழை

மழை என்பது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் ...

                                               

முகில்

முகில் அல்லது மேகம் என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத்துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன. காற்று அதன் பனிநிலைக்கு குளிரும்போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவு பெறும்போது பனிநிலையின் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →